youtube channel ideas tamil..! part 2

1 min read
youtube channel ideas tamil-vidiyarseithigal.com

youtube channel ideas tamil

கொரோனா தொற்றில் பலர் வேலையிழந்தனர் , பலருக்கு வருமானத்தில் பற்றாகுறை ஏற்பட்டது. அந்த காலகட்டத்தில் பலர் வீட்டில் இருந்து லாபம் ஈட்ட பல வழிகளை தேடினர் . அதில் ஒன்று தான் இணையதளம் வாயிலாக லாபம் ஈட்டும் முறை . அதிலும் முக்கியமாக யூடியுப் வலைத்தளம் மூலம் லாபம் ஈட்ட பலர் முயற்சிக்க தொடங்கினர். அன்று முதல் இப்போது வரை இன்னும் பலர் யூடியுப் வலைத்தளங்களில் சேனல் தொடங்கி வருகின்றனர்.

பொதுவாக யூடியுப்பில் அதிகம் காணப்படுபவை cooking மற்றும் travel vlog ஆனால் அவற்றை தாண்டி பல ஐடியாக்கள் உள்ளன யூடியுப் சேனல் தொடங்க அவற்றை குறித்து இந்த பதிவில் காணலாம். இதற்கு முன் உள்ள பதிவில் சில யூடியுப் சேனல்கள் ஐடியாக்களை பாத்தோம் . தற்போது மேலும் சில ஐடியாக்களை காணலாம் .

Fashion care videos:

நீங்கள் அதிகமாக ஷாப்பிங்க் செல்பவராக இருந்தால் நிச்சயம் இதனை நீங்கள் முயற்சி செய்யலாம். பலருக்கு வாரம் ஒரு முறை ஷாப்பிங்க் செல்வது வழக்கமாக இருக்கலாம் . அப்படி இருப்பவர்கள் நீங்கள் செல்லும் இடங்கள் குறித்து அங்கு கிடைக்கும் பொருட்கள் குறித்து அதன் விலை குறித்து ஒரு முழு தகவல் வீடியோ பதிவிடலாம் . இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் ஷாப்பிங்க் வேலையும் முடிந்துவிடும் . நீங்கள் ஷாப்பிங்க் செய்யும் நேரத்தில் கூட ஒரு வருவாய் ஈட்டியது போல ஆகிவிடும் .

Destruction videos :

அது என்ன டிஸ்ட்ரக்ஷன் என யோசிக்கிறீர்களா? உதாரணமாக நாம் வேலை செய்யும் இடத்தில் நமக்கே தெரியாமல் ஒரு சிறு தவறு செய்து விடுவோம். அந்த தவறு மிகப்பெரிய விளைவை ஏற்படுத்திவிடும். எளிதாக கூற வேண்டுமென்றால் இப்போது நீங்கள் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிகிறீர்கள் . அங்கு உங்களுடன் சக பணியாளர் பொருட்களை அடுக்கி வைத்து கொண்டு இருக்கிறார். அப்போது எதர்ச்சயாக அவர் அடுக்கி வைத்த பொருட்கள் விழ தொடங்கி விடுகின்றனர். அந்த் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகலாம். இதுபோன்ற காட்சிகளை கோர்த்து முழு நேர காட்சி ஒன்றினை யூடியுப்பில் பதிவேற்றலாம்.

youtube channel ideas tamil-vidiyarseithigal.com

youtube channel ideas tamil

Cars and bike reviews :

கார் மற்றும் பைக் என்றால் பிடிக்காது என கூறுபவர்களே இங்கு கிடையாது. பெரும்பாலான மக்களுக்கு கார் மற்றும் பைக் என்றால் பிடிக்கும். அவர்களுக்கு பிடித்த பிராண்டின் கார் மற்றும் பைக் வந்தால் வாங்கவில்லை என்றால் கூட அவற்றை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்குமே இருக்கும். நீங்களும் ஒரு கார் மற்றும் பைக் பிரியராக இருந்தால் அவற்றை குறித்த வீடியோக்களை பதிவேற்றலாம்.

அவற்றை ஒட்டி பார்த்து எவ்வாறு அதன் செயல்திறன் உள்ளது. அதன் சிறப்பசங்கள் என்ன. விலை என்ன , இதனுடைய சக போட்டியாளர்கள் யார் உள்ளனர் போன்ற தகவல்களை நீங்கள் உங்கள் யூடியுப் பக்கத்தில் பதிவேற்றலாம். மேலும் கார் மற்றும் பைக் குறித்து பொருட்கள் எங்கு , எவ்வளவு விலையில் கிடைக்கும் போன்ற தகவல்களையும் உங்கள் பக்கத்தில் பதிவேற்றலாம்.

Education and exam videos :

கல்வி குறித்து மக்களிடம் பல கேள்விகள் உள்ளன. எந்த வகையான கல்லூரியை தேர்வு செய்யலாம், என்ன படிக்கலாம் என பல கேள்விகள் உள்ளன. அந்த கேள்விகளுக்கு பதில் அளிப்பது மட்டுமல்லாமல் அதுகுறித்து உங்கள் கருத்துகளை பதிவேற்றி வீடியோக்களை பதிவிடலாம்.  மேலும் பலர் அரசு தேர்வுகளுக்கு தயார் ஆகி வருகின்றனர். அவர்களின் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் வீடியோக்களை பதிவிடலாம்.

அடுத்த அரசாங்க தேர்வு எப்போது வரும், எப்படி அப்பளை செய்யலாம் போண்ற தகவல்களை உங்கள் வீடியோக்கள் மூலம் பதிவேற்றலாம்.இது போன்ற வீடியோக்களை பதிவேற்றினால் எளிதில் பார்வையாளர்களை பெற்றுவிடலாம். மேலும் நல்ல வரவேற்ப்பும் கிடைக்கும் உங்கள் வீடியோக்களுக்கு எல்லாவற்றிக்கும்.

இதுபோன்று பல்வேறு ஐடியாக்கள் உள்ளன உங்களுக்கென என யூடியுப் சேனல் தொடங்க .அதனை தெரிந்து கொள்ள நம் பக்கத்தை பின் தொடருங்கள்.

Spread the love
x