whatsapp privacy: எல்லாத்தையும் கைவிடுங்க…! வாட்ஸ் ஆப் சி.இ.ஓ-வுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் ..!

1 min read
whatsapp privacy-vidiyarseithigal.com

whatsapp privacy

வாட்ஸ் ஆப் உலகில் பல கோடி மக்கள் பயன்படுத்தும் முக்கிய செயலியாக இருந்து வருகிறது. இந்நிலையில் தான் வாட்ஸ் ஆப் நிறுவனம் அதன் பிரைவசி பாலிசியில் மாற்றத்தை கொண்டு வந்தது. இந்த பிரைவசி பாலிசி மாற்றம் பல பயனர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக பல பயனர்கள் வாட்ஸ் ஆப்பை விடுத்து டெலிகிராம், சிக்னல் போன்ற செயலிகளுக்கு செல்ல தொடங்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த வாட்ஸ் ஆப் நிறுவனம் தற்காலிகமாக பிரைவசி பாலிசி மாற்றத்தை தள்ளிவைத்தது.

மேலும் செய்திகளுக்கு கிளிக் செய்யவும் 

அப்போதும் வாட்ஸ் ஆப் பயனர்கள் குறைய தொடங்கியது அடுத்து வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் வைத்து பயனர்களுக்கு வாட்ஸ் ஆப் நிறுவனம் whatsapp privacy  பற்றி தன்னிலை விளக்கம் அளித்தது. இந்நிலையில் தான் வாட்ஸ் ஆப்பில் கொண்டு வந்துள்ள பிரைவசி பாலிசி மாற்றங்களை கைவிட வேண்டும் என வாட்ஸ் ஆப் நிறுவன தலைமை அதிகாரிக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.

மேலும் அந்த கடிதத்தில் வாட்ஸ் ஆப் பிரைவசி மற்றும் தரவுகள் பாதுகாப்பு குறித்து விளக்கம் கொடுக்குமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

Spread the love
x