Whatsapp update: வாட்ஸ் ஆப்பில் வரப்போகும் இன்ஸ்டாகிராம்..! கலக்கல் அப்டேட் சொன்ன நிறுவனம்..!

1 min read
whatsapp update-vidiyarseithigal.com

whatsapp update

உலகின் முக்கிய சமூக வலைத்தள செயலிகளாக பார்க்கப்படுவது Facebook, Instagram, Whatsapp. பல லட்சக்கணக்கான பயனர்கள் இந்த செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலிகளில் அவ்வப்போது புதுமைகளை புகுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அப்படிப்பட்ட புதிய அப்டேட் ஒன்று வரப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது வாட்ஸ் ஆப்பில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோவை பார்க்கும் வசதியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த வசதியை எப்படி பயன்படுத்துவது போன்ற தகவல்கள் வெளியாகவில்லை.

ஆனால் இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த புதிய அப்டேட் பயன்பாட்டுக்கு வரும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் பேஸ்புக் நிறுவனத்தின் அனைத்து செயலிகளும் ஒன்றோடு ஒன்று இணைக்கபடுவது உறுதியாகி உள்ளது.

இவ்வாறு இணைக்கப்பட்டாலும் தனிநபர் பற்றிய தகவல்கள் அனைத்தும் பாதுக்காப்பாக இருக்கும் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Spread the love
x