whatsapp messenger: வாட்ஸ் ஆப் பயன்படுத்துவது கட்டாயம் கிடையாது – டெல்லி உயர்நீதிமன்றம்..!

1 min read
whatsapp update-vidiyarseithigal.com

whatsapp messenger

வாட்ஸ் ஆப் உலகின் முன்னனி தகவல் பரிமாற்ற செயலியாக இருந்து வருகிறது. இந்நிலையில் வாட்ஸ் ஆப்பில் தனியுரிமை கொள்கை மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது. அது பலரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வாட்ஸ் ஆப் போன்ற செயலிகளை பயன்படுத்துவது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். வாட்ஸ் ஆப் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது என்பதனை அனைவரும் உணர வேண்டும்.

மேலும் செய்திகளுக்கு கிளிக் செய்யவும் 

மேலும் அனைத்து செயலிகளுக்கும் விதிமுறைகள் இருக்கின்றன. இருப்பினும் வாட்ஸ் ஆப் செயலிக்கு எதிராக மட்டும் வழக்கு தொடுத்தது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.  இது தொடர்பாக வாட்ஸ் ஆப் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு பெற மத்திய அரசுக்கு கால அவகாசம் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Spread the love
x