nota என்றால் என்ன? அதிக வாக்குகளை NOTA பெற்றால் என்னவாகும்?
1 min readNOTA
உலகில் உள்ள பிற நாடுகளை காட்டிலும் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக கருதப்படுவது இந்தியாவில் நடைபெறும் தேர்தல்கள் தான் . நாடாளுமன்றம் முதல் உள்ளாட்சி தேர்தல் வரை அனைத்திலும் மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்தோடு தங்கள் வாக்குகளை அளித்து வருகின்றனர்.
அப்படிபட்ட மிகப்பெரிய திருவிழாவில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு அவர்கள் வாக்கு உரிமையை நிலைநாட்ட தேர்தல் ஆணையம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அப்படிபட்ட எடுக்கபட்ட நடவடிக்கைகளில் ஒன்று தான் NOTA . ஒரு தொகுதிகளில் பிரதான கட்சி முதல் சுயேட்சை என பல வேட்பாளர்கள் களத்தில் இருப்பர். இதில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என வாக்காளர்கள் முடிவு செய்வார்கள்.
அப்படி யாருக்கும் வாக்களிக்க வேண்டாம் என வாக்காளர்கள் நினைத்தால், அவர்களுக்கு ஏதுவாக இருக்கவே NOTA கொண்டு வரப்பட்டது.
nota meaning:
NOTA இதன் முழு விரிவாக்கம் None Of The Above . இந்த நோட்டா என்பது கடந்த 2013ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. நோட்டா மூலம் வாக்காளர்களின் கருத்து உரிமையை காக்க முடியும் என தேர்தல் ஆணையமும், உச்ச நீதிமன்றமும் நம்புகிறது. நோட்டா என்ற Button அனைத்து வேட்பாளர்களுக்கும் கடைசியாக கீழே இருக்கும் வாக்கு இயந்தரத்தில்.
முதன் முதலில் 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐந்து சட்டமன்ற தேர்தலில் இந்த நோட்டா பயன்படுத்தப்பட்டது. முதன் முதலாக பயன்படுத்தபட்ட போதே நோட்டா ஒரு சதவீதம் வாக்குகளை பெற்றது. மேலும் 2017ம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் சிபிஎம், சிபிஐ போன்ற 5 பதிவு செய்யபட்ட கட்சிகள் பெற்ற வாக்குகளை விட நோட்டா அதிக வாக்குகளை பெற்றது.
NOTAவிற்கு அதிக வாக்குகள் வந்தால் என்ன நடக்கும்?
ஒரு தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களை விட நோட்டாவிற்கு அதிக வாக்குகள் கிடைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? எடுத்துக்காட்டாக ஒரு தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் விட நோட்ட அதிக வாக்குகள் பெற்றால் நோட்டாவிற்கு அடுத்தபடியாக அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர் வெற்றி பெற்றவராக கருதப்படுவார்.
ஒருவேளை நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றால் இரண்டாவது சுற்று தேர்தல் நடத்தபட வேண்டும் என முன்னாள் தேர்தல் அதிகாரி டி.எஸ். கிருஷ்ண மூர்த்தி தெரிவித்திருந்தார்.
இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருப்பது 2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களைவைத் தேர்தல் தான். தமிழ்நாட்டிலுள்ள நீலகிரியில் அதிகபட்சமாக நோட்டாவிற்கு 46,559 வாக்குகள் கிடைத்தன.
இது மொத்த வாக்குகள் அடிப்படையில் பார்த்தால் 5 சதவீதமாகும். மேலும் வெற்றி பெற்ற வேட்பாளருக்கும், இரண்டாவது தாக வந்த வேட்பாளருக்கும் வாக்கு வித்தியாசத்தை விட இது 4 மடங்கு அதிகமாகவும் ஒரு வேளை நோட்டா அங்கு வேட்பாளராக இருந்திருந்தால் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கும்.
முடிவாக நோட்டா எதற்கு?
நோட்டா இருப்பது மக்களின் உரிமையை வெளிப்படுத்த உதவும் என உச்ச நீதிமன்றம் நம்புகிறது. மேலும் நோட்டாவிற்கு அதிக வாக்குகள் கிடைத்தால் அரசியல் கட்சிகள் நம்பிக்கையான வேட்பாளர்களை கண்டறிய உதவும் எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இது அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
நோட்டா இல்லாத நாடுகளில் எப்படி?
நோட்டா France, Greek, spain ஆகிய நாடுகளில் உள்ளது. ஆனால் பிரிட்டனில் நோட்டா இல்லை. அங்கு நோட்டா பயன்படுத்த தடை விதிக்கபட்டுள்ளது. ஆனால் மக்கள் எதிப்புகளை பல்வேறு வகைகளில் தெரிவித்து வருகின்றனர்.
பிரிட்டனில் கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போராட்டம் மற்றும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக குத்துச்சண்டை வீரர் டெர்ரி மார்ஷா None of the above X என தனது பெயரை மாற்றிக்கொண்டு தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அவருக்கும் கிடைத்தது வெறும் 125 வாக்குகள் மட்டுமே.
நோட்டா பெயரில் கட்சியா…!
ஆம் நோட்டா என்ற பெயரில் இந்தியாவில் கட்சி ஒன்று உள்ளது. அந்த கட்சியை நகைச்சுவை கலைஞர் சவிதா பாத்தியும், அவரது கணவர் ஐஸ்பால் பாத்தியும் 2014ம் ஆண்டு உருவாக்கினர். அந்த கட்சியின் பெயர் நோட்டா கட்சி.
வாக்களிப்பது மக்களின் உரிமை அதனை நிலைநாட்டவே NOTA வை இந்திய தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தி உள்ளது. மக்கள் அவர்களுக்கு யாரையும் பிடிக்கவில்லை என்றால் நோட்டாவிற்கு வாக்களிக்கும் வாய்ப்பை வழங்கவே இதனை கொண்டு வந்துள்ளனர்.