cryptocurrency என்றால் என்ன? unkown facts of cryptocurrency..!
1 min readcryptocurrency
பழங்காலத்தில் நமக்கு ஒரு பொருள் தேவை என்றால் பண்டமாற்று முறை மூலம் ஒரு பொருளை கொடுத்து மற்றொரு பொருளை பெற்று வந்தோம். பின் மெல்ல காலம் செல்ல செல்ல நாணயம், ரூபாய் என மாற்றம் அடைந்து தற்போது ஆன்லைன் மூலம் காசு இல்லாமல் பரிவர்த்தனை மற்றும் பல விஷயங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் கண்ணிற்கு தெரியாத டிஜிட்டல் கரென்சிகள் வர தொடங்கிவிட்டன. அப்படியாக வந்த ஒன்று தான் cryptocurrency ஆகும். கண்ணிற்கு தெரியாததும், கையால் தொட முடியாத ஒரு வகையான காசாக இது உள்ளது. கிரிப்டோகரன்சிகளில் பல வகைகள் உண்டு. பிட்காயின், டாக்கி காயின் என பலது உள்ளன.
cryptocurrency என்றால் என்ன?
கிரிப்டோகரன்சி எந்த ஒரு நாட்டிற்கும் சொந்தமானது இல்லை மற்றும் வங்கிகளுக்கு தொடர்பில்லாத ஒரு கரன்சி ஆகும். இந்த வகையான கரன்சியை யார் யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பலாம் மற்றும் பெறலாம். மேலும் எந்த மூலையில் ஒரு நபருக்கும் உடனடியாக இந்த கரன்சியை அனுப்ப முடியும்.
முழுக்க முழுக்க டிஜிட்டல் மூலம் மேற்கொள்ளும் பணபரிவர்த்தனை என்பதால் அனைத்தும் ஆன்லைனில் பதிவாகிவிடும். ஆன்லைன் என்பதால் நஹம் கணக்கை அனைவரும் பார்த்துவிடுவார்களோ என்ற அச்சம் தேவையில்லை.
நம் கணக்கை நம்மை தவிர வேறு எவராலும் பார்க்க முடியாத அளவுக்கு துள்ளியமான பாதுக்காப்பு அம்சம் நிறைந்ததாக இது உள்ளது. முதன் முதலாக கண்டுபிடிக்கபட்ட கிரிப்டோகரன்சி பிட்காயின் ஆகும். இது போன்ற கரன்சிகள் பெரும்பாலும் ஆன்லைன் வர்த்தகத்திற்கு பயன்படுத்தபடுகின்றன.
எவ்வாறு cryptocurrency செயல்படுகிறது?
கிரிப்டொகரன்சி ஆனது டிஜிட்டல் முறையில் செயல்படும் ஒன்றாகும். ப்ளாக்செயின் என்ற டிஜிட்டல் தளம் மூலம் இதனுடைய அனைத்து பரிவர்த்தனைகளும் சேமிக்கப்படுகின்றன. கம்பியூட்டர் மூலம் கிரிப்டோகரன்சி உருவாக்கபடுகின்றன. பின்னர் அங்கிருந்து நாம் அதனை வாங்கிக் கொள்ள முடியும்.
மேலும் கிரிப்டோகரன்சி புரோகரேஜ் மூலம் கூட நம்மால் இதனை வாங்க முடியும். பல ஆண்டுகளாக இருந்தாலும் இதனிடைய பரிவர்த்தனை முறைகள் இன்னும் முழுமை பெறாமல் உள்ளன. அதனை இன்னும் கட்டமைத்து கொண்டு தான் உள்ளனர்.
cryptocurrency வகைகள்:
பிட்காயின்;
கடந்த 2009ம் ஆண்டு முதன் முதலில் கண்டறியப்பட்ட கிரிப்டோகரன்சி இதுவாகும். இன்றளவும் பெரும்பாலும் மக்களால் பயன்பாட்டில் உள்ள கிரிப்டோகரன்சியாக இது உள்ளது. இதனை சடொசி நகடொமா என்பவர் கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது வரை அது உண்மையா? இல்லையா? என்பது புதிராகவே உள்ளது.
எதிரம்:
2015 ம் ஆண்டு கண்டுபிடிக்கபட்ட இது. பிளாக்செயினில் தனக்கென்று சொந்தமான கிரிப்டொகரன்சி கொண்டுள்ளது. அதனை எத்திரயம் என்று அழைப்பர். பிட்காயினுக்கு பின் மிகவும் பிரபலமானது இதுவாகும்.
litcoin
பிட்காயின் போன்றே இது பிரபலமான ஒன்று தான். ஆனால் பிட்காயின் காட்டிலும் அதிக முன்னேற்றங்களை விஞ்ஞான ரீதியாக பெற்றுள்ளது. மேலும் சுலபமான பரிவர்த்தனைகளுக்கு உகந்த ஒண்றாக உள்ளது.
இது போன்ற பல cryptocurrency தற்போது செயல்பாட்டில் உள்ளன.