weight loss tips tamil: Diet இல்லாமல் உடல் எடையை குறைக்க சில டிப்ஸ்..! Best weight reducing tips tamil..!

1 min read
weight loss tips tamil-vidiyarseithigal.com

weight loss tips tamil

உடல் எடை சற்றி அதிகரித்தாலே பலருக்கு முகத்தில் ஒருவித சோகம் தோன்றிவிடுகிறது. அனைவருக்குமே சினிமா ஹீரோக்களை போன்று அழகான உடலை வைத்திருக்க வேண்டும் என ஆசை உள்ளது. ஆனால் வேலை பளு, அன்றாட டென்ஷன் காரணமாக பலருக்கு உடலை கவனித்து கொள்ள நேரமில்லாமல் உள்ளது.

பலருக்கு உடல் எடையை ( weight loss tamil) குறைக்க வேண்டும் என ஆசை உள்ளது . ஆனால் எப்படி குறைக்க வேண்டும் என்பது தான் தெரியவில்லை . உணவை குறைத்தால் வேலைக்கு செல்பவர்களுக்கு முறையான் calories கிடைக்காமல் வேலை செய்ய முடியாமல் உடல் சோர்வு ஏற்பட்டு விடும். Gym க்கு செல்ல வேண்டும் என பலருக்கு ஆசை ஆனால் நேரமில்லாத காரணத்தினால் முடிவதில்லை.

எளிய முறையில் உடல் எடையை குறைக்க சில டிப்ஸ்களை கீழே பார்க்கலாம்:

Breakfast everyday (weight loss tips tamil):

உடல் எடையை குறைக்க வழி என்று சொல்லிவிட்டு காலையில் தினமும் சாப்பிட சொல்கிறார்களே என யோசிக்கிறீர்களா ? . ஆமாம் தினமும் காலை உணவை தட்டி கழிக்காமல் கண்டிப்பாக சாப்பிட வேண்டும். நிறைய மக்கள் காலை உணவை தவிர்த்தால் உடல் எடையை குறைக்கலாம் என எண்ணி கொண்டு இருக்கின்றனர். ஆனால் அது உண்மையில்லை.

காலை உணவை தவிர்ப்பதன் மூலம் நம்முடைய உடல் எடை அதிகரிக்க நாமே காரணமாகி விடுவதாக Elizabeth ward, author of the pocket idiots guide to the new foods pyramids தெரிவித்துள்ளார். மேலும் காலை உணவு தவிர்ப்பவர்களுக்கு Bmi அதிகமாக இருப்பதாகவும் , காலை உணவை எடுப்பவர்களுக்கு bmi குறைவாக இருப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

No food night (weight loss tamil)  :

பொதுவாக இரவு நேரங்களில் உணவிற்கு பின்னர் பல நேரங்களில் நாம் டி.வி பார்க்கும் தருணங்களில் நொறுக்கு தீனி அல்லது வேறு எதேனும் உணவு சாப்பிட விரும்புவோம் . அதனை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அப்படி ஒரு வேளை உணவிற்கு பின் ஏதேனும் சாப்பிட நினைத்தால் ஒரு கப் டீ, சிறிய கப் ஐஸ்கீரிம் போன்றவற்றை குறைந்த அளவில் எடுத்துக் கொள்ளலாம் என கூறுகின்றனர்.

மேலும் இரவு சாப்பிட்டு முடித்த உடன் பற்களை துலக்கினால் கிரிமிகல் வராமல் இருப்பது மட்டுமின்றி  நமக்கு பற்களை துலக்கியதும் மற்ற உணவுகளை சாப்பிட எண்ணம் தோன்றாது என elaine magee என்ற மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார்.

Walk for win ( weight loss tamil)  :

டையடிங்க் இன்றி, ஜிம் போகாமல் உடல் எடையை குறைக்கலாம் என சொன்னீர்கள் இப்போது நடக்க சொல்கிறீர்களே என யோசிக்கலாம். நாம் வேலைக்கு சென்றால் ஒரே இடத்தில் தான் அமர்ந்து கொண்டு இருப்போம். வேலைக்கு போகும் போது கூட பைக் அல்லது இதர வாகனங்களில்  தான் செல்வோம்  எனவே நாம் நடக்கும் நேரம் மிக குறைவாக இருக்கின்றது.

இப்படி நாம் உடல் உழைப்பை குறைவாக கொடுத்து உணவு முறை மாற்றத்தை கொண்டுவந்தாலும் பெரிதாக மாற்றம் ஏற்படாது. குறைந்தது நாள் ஒன்றுக்கு 10,000 Steps நடக்க வேண்டும். எப்படி 10 ஆயிரம் Step கள் நடந்ததை கண்டுபிடிக்க முடியும். தற்போது வரும் அனைத்து செல்போன்களிலும் Pedometer என்ற வசதி உள்ளது அதன் மூலம் நாள் ஒன்றுக்கு எத்தனை Step கள் நடக்கிறோம் என்பதனை அறிய முடியும்.

Good Sleep:

பெரும்பாலான மக்கள் இரவு நேரங்களில் தூங்குவதை குறைத்து கொள்கின்றனர். செல்போன்களை பயன்படுத்தி தூக்கத்தை குறைத்து விட்டனர். அண்மையில் நடத்தப்பட்ட சில ஆய்வு முடிவுகள் கூறுவது என்னவென்று பார்த்தால் குறைவான தூக்கம் உடலுக்கு தேவையான energy உற்பத்தி செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது.

இதன் காரணமாக நம் உடலில் உள்ள calories கள் அப்படியே தேக்கம் அடைந்துவிடுகிறது. இதன் காரணமாக Fat ஆக மாறி உடலிலேயே தங்கி விடுகிறது. இதனால் உடல் எடை அதிகரித்து கொண்டே உள்ளது என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலே கூறப்பட்டு இருப்பன சில வழிகள் மட்டுமே, ஆனால் இவற்றை முறையாக கடைப்பிடித்தாலே நம் உடல் எடை நன்கு குறைவதை நம்மால் உணர முடியும். மேலும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

Spread the love
x