weight loss drink in tamil:உடல் எடையை குறைக்க குடிக்க வேண்டிய பானங்கள்..!
1 min readweight loss drink in tamil
எல்லாருக்கும் உடல் எடை ஏறினாலே நிச்சயம் மனதிற்குள் ஒரு வித கலக்கம் இருக்கும். ஆம் நமது உடல் எடை நமது மனதின் வலிமையை ஒரு வகையில் தீமானிக்கிறது. உடற்பயிற்சி செய்வதன் மூலம் நமக்குள் ஒரு வித தெளிவு பிறக்கிறது. என்னதான் உடற்பயிற்சி செய்து வந்தாலும் அதற்கேற்ப உணவு கட்டுபாடு வேண்டும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் உணவு கட்டுபாடு இல்லாமல் இருந்தால் என்னதான் உடற்பயிற்சி இருந்தாலும் உடல் எடையை குறைக்க எளிதாகி விடாது.
நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவு எந்த அளவுக்கு உடல் எடையை அதிகரிக்க காரணமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு நீங்கள் அருந்தும் பானமும் உடல் எடையை அதிகரிக்க வழிவகை செய்கிறது. உடல் எடையை குறைக்க எந்த வகையான பானங்கள் எடுத்துக் கொள்ளலாம் என யோசிக்கிறீர்களா? அவை என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
தண்ணீர்: என்ன இது நாம் நாள்தோறும் அருந்தும் ஒரு பானம் நம் உடல் எடையை குறைக்க உதவுமா என யோசிக்கிறீர்களா? ஆம் நாள் தண்ணீர் அருந்துவது நம் உடல் எடையை குறைக்க உதவும். சில நேரங்களில் உடலில் நீர் சத்து குறைவதால் பசி உணர்வு தோன்றுகிறது. அந்த சமயத்தில் தண்ணீர் அருந்துவதன் மூலம் பசி உணர்வு குறைத்து எடை குறைக்க உதவுகிறது. தண்ணீர் ஒரு ஜீரோ கலோரி கொண்ட பானம் ஆகும் . அதிக அளவில் தண்ணீர் குடிப்பது உணவு அதிக அளவில் எடுத்து கொள்வதை தடுக்கிறது. அதுமட்டுமின்றி 2019ல் நடத்தபட்ட ஆய்வில் தண்ணீர் குடிப்பதன் மூலம் 5.15% உடல் எடையை குறைக்க உதவுகிறது தெரியவந்துள்ளது. உங்கள் எடை தோராயமாக 70 என்றால் எளிதாக 3.5 கிலோ எடை குறைக்கலாம் என கூறப்படுகிறது.
weight loss drink in tamil
கீரின் டீ: பலருக்கு தெரிந்த ஒன்று தான் இது. உங்கள் எடையை கட்டுபடுத்தும் பான வகைகளில் கீரின் டீ முக்கிய பங்கு வகிக்கிறது. கீரின் டீ யில் பல்வேறு ஊட்டசத்துகள் உள்ளன. உங்களின் வளர்சிதை மாற்றத்தை குறைக்கும் கேட்சின்ஸ் மற்றும் காபீன் ஆகிய இரண்டும் உள்ளன. காபீன் நீங்கள் ஓய்வாக இருக்கும் போது கொழுப்பை மற்றும் கலோரிகளை குறைக்க உதவுகிறது.
weight loss tips tamil: Diet இல்லாமல் உடல் எடையை குறைக்க சில டிப்ஸ்..! Best weight reducing tips tamil..!
பிளாக் டீ : அடுத்து இந்த பான வகையில் நாம் பார்க்க இருப்பது பிளாக் டீ ஆகும் . நம் உடல் எடையை குறைக்கும் பல்வேறு மூல வகைகள் தேநீரில் உள்ளன. பிளாக் டீயாக குடிக்கும் போது, பாலிஃபினால்ஸ் என்ற ஆன்டிஆக்சிடன்ட் உடல் பருமனைக் குறைக்க உதவுகிறது.சில ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட ஒரு சிறிய ஆய்வில், தினமும் 3 கப்புகள் பிளாக் டீ குடிப்பது, எடை அதிகரிக்கும் அபாயத்தை பெருமளவில் குறைத்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
வெஜிடபில் ஜூஸ்:
எப்போதும் பழங்களை பழச்சாறாக குடித்து இருப்போம். ஆனால் உடல் எடையை குறைக்க காய்கறியை ஜூஸ் போல குடிப்பது நல்ல பயன் அளிப்பதாக உள்ளது. லெப்டின் என்பது ஒரு வகையான ஹார்மோன் ஆகும் . இந்த ஹார்மோன் ரத்தத்தில் அதிகபடியாக இருந்தால் உடல் பருமன் ஏற்படுகிறது. ஆனால் வெஜிடபிள் ஜூஸ் குடிப்பதன் மூலம் லெப்டின் அளவு குறைந்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. ஆனால் பாட்டிலில் இருந்து வரும் ஜூஸ்களை குடிப்பதை தவிர்க்க வேண்டும் .