waterfall: Best Waterfalls in India To visit in tamil..!
1 min readwaterfall
நீர்விழ்ச்சியில் குளிப்பது என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைருக்குமே ஒரு புதுவித உற்சாகம் தோன்றிவிடும். குறிப்பாக பெரியவர்கள் கூட சிறியவர்களுக்கு இணையாக மாறி நீர்வீழ்ச்சியில் குளிப்பதை ரசிக்க தொடங்கிவிடுவர். அந்த அளவுக்கு நீர்வீழ்ச்சி என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக உள்ளது.
இந்தியாவில் பல விதமான நீர்வீழ்ச்சிகள் பல மாநிலங்களில் உள்ளன. பலர் இந்த இடங்களுக்கு சென்று இருப்பீர்கள். ஆனால் சில இடங்கள் இருப்பது இன்னும் பலருக்கு தெரியாமல் இருக்கலாம் . அதுபோல மிகவும் பிரபலமான மற்றும் அறியப்படாத நீர்வீழ்ச்சிகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
Jog Falls:
ஜாக் நீர்வீழ்ச்சி சிமோகா மற்றும் உத்தர கன்னடா மாவட்டங்களுக்கு இடையே அமைந்துள்ளது.இயற்கை எழில் கொஞ்சும் காடுகளுக்கு இடையே இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. மலை ஏறுபவர்களுக்கு சிறந்த இடமாக இந்த நீர்வீழ்ச்சி உள்ளது. இரயில் மூலம் அலைச்சல் இன்றி அழகாக சென்றடையலாம். அருகாமையில் உள்ள இரயில் நிலையம் சிமோகா ஆகும். இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்ல உகந்த காலம் ஜூன் முதல் செப்டம்பர் ஆகும் .
waterfall
Talakona Falls, Andhrapradesh:
வெங்கடேஷ்வரா நேஷ்னல் பார்க் என்ற இடத்தில் இந்த நீர்வீழ்ச்சியானது அமைந்துள்ளது.இந்த நீர்வீழ்ச்சியில் மூலிகை நிறைந்த தண்ணீர் இருப்பதாக கூறுகின்றனர். சுமார் 270 அடி உயரத்தில் இருந்து இந்த நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது. இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்ல உகந்த நேரம் செப்டம்பர் முதல் பிப்ரவரியாகும் .
Hogennakal Falls , Tamilnadu:
இந்த நீர்வீழ்ச்சி பற்றி நாம் சொல்ல வேண்டியது ஒன்றுமில்லை . அதிகமான நபர்களுக்கு ரொம்ப பரீச்சையமான நீர்வீழ்ச்சியாக இது உள்ளது. சினிமா படப்பிடிப்புகளுக்கு அதிகபடியான நபர்கள் செல்லும் இடமாக இந்த நீர்வீழ்ச்சி உள்ளது. தமிழகத்தில் உள்ள பெரும்பானவர்கள் நிச்சயம் இந்த இடத்திற்கு சென்று இருப்பர். மேலும் இங்கு நீங்கள் படகு சவாரி செய்ய கூட இடம் உள்ளது. இந்த நீர்வீழ்ச்சியை காண சிறந்த மாதம் அக்டோபர் முதல் மார்ச் மாதம் ஆகும் .