விஜய் டிவி சீரியல் பிரலபலம் திடீர் உயிரிழப்பு…!! அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

1 min read
tamil cinema-vidiyarseithigal.com

தமிழில் ஒளிப்பரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து பிரபலமான நடிகர் வெங்கடேஷ் அதை தொடர்ந்து பாரதி கண்ணம்மா சீரியலில் கதாநாயகிக்கு அப்பாவாகவும் மேலும் பல பிரபல சீரியல்களில் தந்தை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சன் டிவியில் ஒளிப்பரப்பான செல்லம்டி நீ எனக்கு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். மேலும் பெரும்பாலான சீரியல்களில் கிராமத்து தந்தையாக நடிப்பதற்கு முதல் தேர்வாக இருப்பதும் வெங்கடேஷ் தான்.

venkatesh-vidiyar

இந்நிலையில் நடிகர் வெங்கடேஷ் இன்று மதியம் 2.30 மணியளவில் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவருடைய மறைவுக்கு சின்னத்திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் பாரதி கண்ணம்மா, ஈரமான ரோஜாவே சீரியல்களில் நடித்து வரும் பிரபலங்கள் இவரின் மறைவுக்கு அவருடைய புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Vijay Television on Instagram: “#RIP 😢”

Spread the love
x