upcoming smartphones 2021:இந்த மாதம் வெளியாக ஸ்மார்ட்போன்கள்..! படிச்சுட்டு வாங்குங்க.!

1 min read
upcoming smartphones 2021-vidiyarseithigal.com

upcoming smartphones 2021

ஸ்மார்ட்போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் உள்ளது. ஸ்மார்ட்போன் இல்லாத நபர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்து விட்டது. மேலும் கொரோனா காலத்தில் குழந்தைகளின் ஆன்லைன் கல்விக்காக ஸ்மார்ட்போன் பயன்பாடு பெரிதும் உதவும் வகையில் உள்ளதால் பலரும் ஸ்மார்ட்போன் வாங்கி வருகிண்றனர்.

REDMI note 11 5G:upcoming smartphones 2021

Redmi Note 11T 5G அதிகாரப்பூர்வமாக நவம்பர் 30ம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் Redmi Note 11T விற்பனை டிசம்பர் மாதத்தில் தொடங்கும். இந்த போன் சமீபத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Redmi Note 11 5G-ன் சிறப்பம்சங்களை ஒத்து இருக்கிறது. MediaTek dimensity 810 MT6833 ப்ராசெஸ்சார் மூலம் இந்த போன் இயக்கப்படுகிறது. 5,000mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு USB Type-C போர்ட்டை கொண்டுள்ளது. மேலும் 4 ஜிபி , 128 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. பின்பக்கம் 50 எம்பி மற்றும் 8 எம்பி கொண்ட இரண்டு கேமராக்கள், 16 எம்பி செல்பி கேமரா உள்ளது.

XIAOMI 12:upcoming smartphones 2021

Xiaomiயின் அடுத்த தலைமுறை Xiaomi 12 மாடல் ஸ்மார்ட்போன்கள் டிசம்பர் 12ம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் Qualcomm Snapdragon 8 Gen 1 SoC (அல்லது Snapdragon 898 SoC) ப்ராசெஸ்சார் மூலம் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்புறத்தில் 50 மெகாபிக்சல் கேமரா மற்றும் 100W வேகமான சார்ஜிங் அம்சங்கள் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 12 சாப்ட்வேர் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Oneplus 9Rt:upcoming smartphones 2021

சமீபத்தில் சீனாவில் அறிமுகமான OnePlus 9RT ஆனது வரும் டிசம்பரில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட்டுடன் வர இருக்கிறது. மேலும் இதில் 65W வேகமான சார்ஜிங், 120Hz டிஸ்ப்ளே மற்றும் 50-மெகாபிக்சல் சோனி IMX766 முதன்மை கேமரா, 16 எம்பி செல்பி கேமரா போன்ற முக்கிய அம்சங்களை எதிர்பார்க்கலாம். மேலும் 4,500mAh பேட்டரி, 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 256 ஜிபி என்ற மூன்று வேரியண்ட் ஸ்டோரேஜ் அம்சங்களுடன் வருகிறது.

easy pregnancy tips in tamil:வேகமாக கருதரிக்க எளிய வழிமுறைகள்..!

MOTO g200:upcoming smartphones 2021

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மற்றொரு ஸ்மார்ட்போனான Moto G200 அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Moto G200 Snapdragon 888 Plus ப்ராசெஸ்சார் மூலம் இயங்கும். Moto G200 ஆனது 108 மெகாபிக்சல் டிரிபிள் கேமரா, 16 எம்பி செல்பி கேமரா அமைப்புடன் வருகிறது மற்றும் 5,000mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

MOTO G51 5G:upcoming smartphones 2021

லெனோவாவுக்கு சொந்தமான மோட்டோரோலா இந்தியாவில் தனது மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்ட்போனை டிசம்பரில் அறிமுகப்படுத்தும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நாட்டிலேயே முதல் ஸ்னாப்டிராகன் 480+ ப்ராசெஸ்சார் பொருத்தப்பட்ட ஸ்மார்ட்போனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜி-ஸ்மார்ட்போன் வரிசையில் ரூ.20,000க்கு கீழ் உள்ள முதல் 5ஜி ஸ்மார்ட்போன் இதுவாகும். ஸ்னாப்டிராகன் சிப்செட்டை தவிர, பெரிய 6.8-இன்ச் முழு-எச்டி+ மற்றும் 50 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா, 13 எம்பி செல்பி கேமராவும் உள்ளது.

Spread the love
x