types of phobia ..! types of phobia in tamil உங்களுடைய பயத்துக்கு இதான் பெயர் ..!

1 min read
types of phobia -vidiyarseithigal.com

types of phobia

பொதுவாக நாம் அனைவருக்குமே ஏதேனும் ஒன்று மீது பயம் இருந்து கொண்டே தான் இருக்கும். சிலருக்கு உயரம் என்றால் பயம், சிலருக்கு இருட்டு என்றால் பயம் என பலவித பயங்கள் இருந்து கொண்டு தான் உள்ளன. இப்படியாக உள்ள பயங்களுக்கு சில பெயர்கள் உண்டு . அவை குறித்து இப்பதிவில் types of phobia in tamil   காணலாம்.

Agaraphobia :

சிலருக்கு கூட்டமாக இருக்கும் இடங்களை பார்த்தால் பயம் ஏற்பட்டுவிடும் அந்த வகை பயத்திற்கு Agaraphobia என பெயர் வைக்கபட்டுள்ளது. இதுபோன்ற போபியா உடைய நபர்கள் பொதுவாக வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்ப்பர்.

Acrophobia( Fear of heights) :

கடந்த சில நாட்களுக்கு முன் எடுக்கபட்ட கணக்கெடுப்பின் படி 6.4% 18 வயதுக்கு மேல் உள்ள நபர்கள் இந்த வகை போபியாவை உணர்கிறார்கள். ஆண்களை விட பெண்கள் தான் இந்த வகை போபியா அதிகம் கொண்டவர்களாக உள்ளனர்.

Arachnophobia ( Fear of spiders ):

Cockroaches பார்த்து சிலர் பயப்படுவர் அதைபோல Spiders ( சிலந்திகளை ) பார்த்து ஏராளமான மக்கள் பயப்படுவதாக 2010ம் ஆண்டு எடுக்கபட்ட சில தகவல்கள் கூறுகின்றன. இந்த வகை பயத்தை arachnophobia என்று அழைப்பர்.

Driving Phobia ( fear of driving ) :

என்ன தான் நாம் வாகனத்தை ஒட்டுவதில் திறமைசாலியாக இருந்தாலும் நமக்கே தெரியாமல் சில நேரங்களில் வாகனங்கள் ஒட்டுவதற்கு அஞ்சுவோம் அந்த பயத்தை தான் Driving phobia என அழைக்கின்றனர். 2017ம் ஆண்டு நடத்தபட்ட ஆராய்ச்சி ஒன்றில் 6% adults அதாவது 55-70 வயதுக்கு மேல் நபர்கள் இந்த போபியாவை உணர்கிறார்கள்.

Glossophobia ( Fear of speaking in public) :

பொதுவெளியில் சத்தமாகவோ அல்லது கூட்டத்தினர் முன்பு பேச நாம் எப்போதுமே அச்சப்படுவோம் இந்த வகை அச்சத்தை தான் Glossophobia என்ற அழைக்கின்றனர். இதற்கு முக்கிய காரணமாக கூறுவது எங்கு மற்றவர்கள் நம்மை Judge அல்லது humiliate செய்து விடுவார்களோ என்ற அச்சம் தான் காரணமாக கூறப்படுகிறது.

Emetophobia ( fear of vomiting ) :

பயணங்கள் மேற்கொள்ளும் போது சிலர் சொல்லி நாம் கேட்டிருப்போம் அல்லது நமக்கு நிகழ்ந்திருக்கும். என்னது என்று பார்த்தால் Vomit வருவது போன்ற உணர்வு . இந்த உணர்வு அல்லது அச்சத்திற்கு பெயர் தான் Emetophobia என கூறுகின்றனர்.

Cynophobia (Fear of dogs ) :

நாய்கள் என்றால் அனைவருக்குமே பயம் தான் . ஆனால் அதிலும் ஒரு சிலர் மிகவும் அச்சப்படுவர் . அப்படிபட்ட உணர்வுக்கு பெயர் தான் Cynophobia . இந்த வகை போபியாக்கள் 100-ல் 5 பேருக்கு இருப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றனர்.

Hemophobia ( Fear of Blood) :

சிலருக்கு தண்ணீரை பார்த்தால் பயமாக இருக்கும், சிலருக்கு எண்ணெய்யை பார்த்தால் கூட பயமாக அப்படியாக தான் சிலருக்கு இரத்தத்தை பார்த்தால் பயம் போன்ற ஒரு உணர்வு ஏற்படும் இதற்கு பெயர் தான் Hemophobia . சில சமயங்களில் அவர்களது உடம்பில் இருந்து இரத்தம் வெளியேறி பார்த்தால் கூட இவர்கள் பயப்படுவார்கள்.

Autophobia ( Fear of alone ) :

கூட்டமான இடத்தை அல்லது கூட்டத்தை பார்த்தால் எப்படி சிலருக்கு பயம் ஏற்படுமோ அதுபோல தான் கூட்டம் இல்லாமல் தனியாக இருக்கும் இடத்தையோ அல்லது தனியாக இருந்தாலோ பயம் ஏற்படும் இதனை autophobia என அழைப்பர் . இந்த வகை போபியாக்கள் உள்ளவர்கள் பெரும்பாலும் தனியாக இருப்பதை தவிர்ப்பர்.

Hydrophobia ( Fear of Water ):

தண்ணீரை பார்த்தால் நாம் அனைவருமே மகிழ்ச்சியடைந்து விளையாட தொடங்குவர். ஆனால் இந்த வகை போபியாக்கள் உடையவரகள் தண்ணீரை பார்த்தால் பயப்பட தொடங்கி விடுவர் . இந்த போபியாவுக்கு பெயர் Hydrophobia ஆகும்.

இதுபோன்ற போபியாக்கள் ஒன்றும் நோய் அல்ல இவை அனைத்துமே ஒரு வகையான Sensation ஆகும். முறையாக நம் மனதை ஒரு நிலைப்படுத்தி வந்தால் இந்த போபியாக்களை நாம் சரி செய்யலாம்.

Spread the love
x