Types Of Income tamil..! இப்படியெல்லாம் வருவாய் ஈட்ட முடியுமா ?

1 min read
Types Of Income tamil-vidiyarseithigal.com

Types Of Income tamil

ஒவ்வொரு மனிதருக்கும் நன்றாக சம்பாரிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டு தான் இருக்கும். வேலைக்கு செல்வது, தொழில் செய்வது இவை மட்டுமே வருவாய் இல்லை. இவற்றை தாண்டி நமக்கு தெரியாமல் பல வகையில் வருவாய் வந்து கொண்டு தான் உள்ளது. அதனை நாம் எப்படி உருவாக்க வேண்டும் . எப்படிபட்ட வருவாய் அது என நாம் தான் தேர்வு செய்ய வேண்டும்.

இதுபோன்ற வழிகளில் நாம் ஒரு தொடர் வருவாய் பெறலாம். அது எப்படி என பின் வருமாறு காணலாம் இந்த தொடரில் பின்வருமாறு

Types Of Income tamil

1.Earned Income :

அப்படியென்றால் ஒரு வேளைக்கு சென்று அதன் மூலம் நாம் ஈட்டும் வருவாய் ஆகும் . இப்படி வருவாய் எப்போதும் நமக்கு கணிசமாக வந்து கொண்டிருக்கும் . சில கடினமானதாகவும் இருக்கும் . குறிப்பிட்ட தொகையை மட்டும் வைத்து நமக்கு வேண்டியவற்றை செய்து கொள்ள முடியாமல் போகலாம் . அதற்காக இன்றைய உலகில் பலர் கூடுதல் வேலைகள் செய்து வருவாய் ஈட்டி வருகின்றனர்.

2.Profit Income :

அப்படியென்றால் ஒரு பொருளை வாங்குவது மற்றும் விற்பது மூலம் நமக்கு கிடைக்கும் குறிப்பிட்ட வருவாய் ஆகும் . உதாரணமாக ஒரு வீட்டினை 10 லட்சம் கொடுத்து வாங்கி உள்ளீர்கள் என்றால் அடுத்த சில மாதங்களில் அதனை 12 முதல் 15 லட்சத்திற்கு விற்று அதன் மூலம் நீங்கள் ஈட்டும் மேற்கொண்ட லாபம் தான் இது.

3.Intrest Income :

அப்படியென்றால் பணத்தினை கடனாக அளித்து அதன் மூலம் வரும் வட்டி ஆகும் . பெரும்பாலான நேரங்களில் நம்மில் பலர் 5000 முதல் கடனாக கொடுத்து அதன் மூலம் வட்டி பெற்று இருப்போம் . அதிலும் சிலர் இதனை தொழிலாக எடுத்து செய்தும் வருகின்றனர் . ஆனால் இது போன்ற வருவாய்களுக்கு சில கட்டுபாடுகள் உள்ளது. அதீத வட்டிக்கு கொடுத்தால் சட்டவிரோத செயலாகும் . அவற்றை எல்லாம் அறிந்து நாம் செய்ய வேண்டும்.

4.Yield Income :

அப்படியென்றால் கிரிப்டோ அல்லது வேறு வகையில் ஸ்டாக்களை வாங்கி வைத்து அதன் மூலம் வரும் வருவாய் ஆகும் . தற்காலத்தில் கிரிப்டோ கரன்சி பெரும்பாலான மக்கள் வாங்கி வருகின்றனர். குறிப்பாக இளம் தலைமுறையினர் முக்கிய பங்குகளில் தங்களது பணத்தினை முதலீடு செய்து வருகின்றனர். இதுபோன்று முதலீடு செய்து அதன் மூலம் வரும் குறிப்பிட்ட வருவாய் தான் இப்படி அழைக்கபடுகிறது.

5.Rental Income :

அப்படியென்றால் நமது பொருளை வாடகைக்கு விடுவது மூலம் வரும் வருவாய் ஆகும் . குறிப்பாக வீடு , கார் போன்றவை வாடகைக்கு பலர் விடுகின்றனர். இது போன்று செய்வதன் மூலம் ஒரு நிறந்தர வருவாய் ஈட்ட முடிகிறது.

இது போன்று பல விதத்தில் வருவாய் ஈட்ட முடியும் . அதனை ஆராய்ந்து அதற்கேற்ப நாம் ஈடுபட்டு வந்தால் நிறந்தர வருவாய் எப்போதும் நமக்கு வந்து கொண்டே இருக்கும் என பலர் கருதுகின்றனர். வருங்காலமும் எவ்வித தொந்தரவு இன்றி இருக்கலாம் என எண்ணுகின்றனர் பலர்

Spread the love
x