top unexplored places in india..!தென் இந்திய சுற்றுலா தலங்கள்..!
1 min readtop unexplored places in india
சுற்றுலா செல்ல தயாராக உள்ளீர்களா? ஆனால் யாரும் செல்லாத சுற்றுலா தலங்களுக்கு செல்ல வேண்டும் என்று ஆசைபடுகிறீர்களா? அப்படிபட்ட இடங்கள் தென் இந்தியாவில் உள்ளன. பெரும்பாலான மக்களால் அறியப்படாத சுற்றுலா தலங்கள் குறித்து இப்பதிவில் காணலாம்.
Gandikotta: (top unexplored places in india)
ஆந்திர மாநில கடப்பா மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம் தான் கண்டிகோட்டா. தென் இந்தியாவில் சுற்றி பார்க்க வேண்டிய இடங்களில் முக்கியமான இடமாக இது உள்ளது. இந்தியாவில் கிராண்ட் கேன்யன் என்று அழைக்கபட்டு வருகிறது. கண்டிகோட்டாவிற்கு செல்லவதே மிகப்பெரிய சவால் நிறைந்த ஒன்றாக உள்ளது. வாகன போக்குவரத்து மிக குறைந்த அளவில் காணப்படும் இடங்களில் கண்டிக்கோட்டாவும் ஒன்றாகும் (unexplored places in south india).
மலை ஏற்றம் விரும்பும் நபர்களுக்கு சிறந்த இடமாக இந்த இடம் உள்ளது. தென் இந்தியாவில் வெகுவாக அறியப்படாத இடமாக இது இருந்து வருகிறது. அருகாமையில் உள்ள ரயில் நிலையம் முட்டனூறு ரயில் நிலையம் ஆகும். அருகாமையில் உள்ள பேருந்து நிலையம் ஜமலமடகு ஆகும்.
Araku valley :(top unexplored places in india)
அடுத்ததாக இந்த வரிசையில் வருவது Araku valley (unexplored places in south india) ஆகும். காபி சாகுபடிக்கு சிறந்த இடமாக அரக்கு சமவெளி உள்ளது. இங்கு உள்ள காபி கொட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி ஆகி வருகிறது. விசாகபட்டினம் மாவட்டத்தில் இந்த அரக்கு சமவெளி ஆனது அமைந்துள்ளது. Galikonda, Raktakonda, Sunkarimetta மற்றும் Chitamogondi போன்ற மலை தொடர்களால் சூழப்பட்டுள்ள ஒரு சிறந்த மலை தொடராக உள்ளது.
மலை பிரதேசங்கள் என்றாலே மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் ஒரு இடமாக தான் இருக்கும். ஆனால் இது சற்று மாறுப்பட்டு அதிகபடியான மக்களால் அறியப்படாத இடமாக உள்ளது. நகர வாழ்க்கையில் இருந்து சற்று ஒய்வு எடுக்க புதியதாக ஒரு இடத்தை தேடுபவர்களுக்கு சிறந்த இடமாகும். சாலை மற்றும் இரயில் மூலமாக இவ்விடத்திற்கு செல்ல முடியும்.
Belum Caves:(top unexplored places in india)
இந்திய துணைகண்டத்தில் உள்ள இரண்டாவது பெரிய குகை என்றால் பெலம் குகை (unexplored places in south india) என்று கூறலாம். 3229 மீட்டர் நீளம் கொண்ட குகையாக இது உள்ளது. ஒரு திரில்லான முறையில் விடுமுறை கழிக்க விரும்பும் அனைவரும் இங்கு சென்றால் நிச்சயம் திரில்லை உணரலாம். மிகவும் நீளமான நடைபாதைகள், தண்ணீர் குட்டைகள் என பலவற்றை உள்ளடக்கிய குகையாக உள்ளது. குகைக்கு உள்ளே செல்ல முக்கிய வழியை தவிர மேலும் 16 வழிகள் உள்ளன.
அத்தகைய நீளம் மற்றும் திரில்லான அனுப்பவம் கொடுக்கும் குகையாக இது விளங்கி வருகிறது. பெலம் குகைக்கு அருகாமையில் உள்ள ரயில் நிலையம் தடிபத்ரி ஆகும். மும்மை, சென்னை, திருப்பதி போன்ற பல ஊர்களில் இருந்து செல்லும் ரயில்கள் தடிப்பத்ரி வழியாக செல்கின்றன. அந்த ரயில் நிலையத்தில் இறங்கி பேருந்தில் சென்று இந்த குகையை அடையலாம். தென் இந்தியாவில் பலரும் செல்லாத சுற்றுலா தலத்தில் இது முக்கிய ஒன்றாகும்.
Skandhakiri hills:(top unexplored places in india)
பெங்களூரில் இருந்து 70 கிமீ தொலைவில் அமைந்துள்ள மலை தொடர் தான் ஸ்கந்தகிரி மலை ஆகும். இதனை காலவர துர்கா எனவும் அழைப்பர். அதிகப்படியான மக்கள் செல்லாத இடத்தில் சிறந்த இடம் இதுவாகும். மக்கள் அதிகம் செல்லாத காரணமோ என்னவோ இப்பகுதி பற்றி பெரும்பாலான தகவல்கள் இல்லாமல் உள்ளன. ஆனால் இப்பகுதி பற்றி உள்ள சில புகைப்படங்கள் இவ்விடத்தின் சிறப்பை கூறுகிறது. டிசம்பர் மாதங்களில் தென் இந்தியாவில் செல்ல கூடிய சிறந்த இடத்தில் இதுவும் ஒன்று.
Papi hills:(top unexplored places in india)
இந்தியாவில் எண்ணற்ற மலைதொடர்கள் உள்ளன ஆனால் பெரும்பாலனவை மக்கள் அறியாத ஒன்றாக உள்ளன. அதுபோன்ற ஒரு சிறந்த இடம் தான் இந்த பப்பி மலை ஆகும். ராஜமுந்திரி பகுதியில் அமைந்துள்ள மலை தொடர்களில் இது ஆகும். அங்குள்ள மலைத்தொடர்களுக்கு மத்தியில் படகு சவாரி செல்வது ஒரு இனம்புரியா உணர்வை அளிக்கிறது.
ராஜமுந்திரி, குண்ணாவரம் போன்ற பகுதிகளில் இருந்து படகு சவாரி செய்ய வசதிகள் செய்யபட்டுள்ளன. நேர அளவினை பொறுத்து ஏராளமான சவாரிகள் அழைத்து செல்லபடுகிறது. பப்பி மலைக்கு ராஜமுந்திரி அல்லது குன்னாவரம் என இரு வழியாக செல்லலாம். குன்னாவரம் அல்லது ராஜமுந்திரி அடைந்துவிட்டு அங்கிருந்து படகு மூலம் பப்பி மலையை அடையலாம்.
இவை மட்டுமல்ல தென் இந்தியாவில் ஏராளமான மலை தொடர் மற்றும் சுற்றுலா தலங்கள் பலரால் அறியப்படாத ஒன்றாக உள்ளது. இவ்வாறு யாரும் செல்லாத இடங்களுக்கு செல்ல விரும்பும் நபர் நீங்கள் என்றால் நிச்சயம் இங்கு செல்லலாம்.