Top Power Bank Under 1000 in Tamil..!
1 min readTop Power Bank Under 1000
இப்போது பலரிடம் ஸ்மார்போன் உள்ளது. என்னதான் ஸ்மார்ட்போன்களில் பேட்டரி திறன் அதிகளவில் கொடுக்கப்பட்டு இருந்தாலும் பயனர்களுக்கு அது போதுமானதாக இல்லை. பலர் காலை எழுந்தவுடன் ஸ்மார்ட்போனை பயன்படுத்த ஆரம்பித்துவிடுகின்றனர். பின்னர் சில மணி நேர பயன்பாட்டிற்கு பின்னர் உடனே எங்கு சார்ஜ் போடுவது என தெரியாமல் அலைவதை வாடிக்கையாக்கி உள்ளனர்.
இதுபோன்ற இக்கட்டான சூழல்களில் பெரிய பங்காற்றி வருவது பவர் பேங்க் தான். பவர் பேங்க் மூலம் நமது செல்போனை எந்த இடத்தில் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சார்ஜ் போட்டு கொள்ளலாம். ஆனால் ஒரு சிறிய ரக, விலை குறைவான பவர் பேங்கினை இந்த காலத்தில் கண்டறிவது மிக கடினமான ஒன்றாக உள்ளது. ஆனால் அப்படி இல்லாமல் இந்த பதிவில் ஒரு காம்பேக்டான , விலை மலிவான பவர் பேங்குகள் என்ன உள்ளது என பார்க்கலாம் .
URBN PowerBanks:
இந்நிறுவனம் பவர்பேங்க் முதல் அனைத்துவிதமான மொபைல் பொருட்களையும் விற்று வருகிறது. இந்த குறிப்பாக நாம் பார்க்கபோவது பவர் பேங்க் பற்றி தான் காரணம் பவர் பேங்க் செக்மெண்டில் குறைவான விலை மற்றும் காம்பேக்டான பவர் பேங்குகள் இந்த நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. குறிப்பாக இதில் இருந்து வெளியான குறைவான . காம்பேக்ட் பவர் பேங்க் என்ன என்று பார்த்தால் URBN ultra compact power bank தான்.
12வாட் பாஸ்ட் சார்ஜிங்க் திறனுடன் வடிவமைக்கபட்டுள்ளது. மேலும் இரண்டு USB output கொண்டதாக உள்ளது. டைப் c மற்றும் மைக்ரோ இன்புட் கொண்டதாக உள்ளது. இதன் காம்பேக்டான அளவினால் வெளியே எடுத்து செல்ல எளிதான ஒன்றாக உள்ளது. இதன் பேட்டரி திறன் 10 ஆயிரம் எம்ஏஅச் ஆகும். இதன் மூலம் எளிதாக இரண்டு முறை ஒரு ஐ போனை சார்ஜ் செய்ய முடியும் . இதன் விலை ரூபாய் 700 ஆக உள்ளது.
Oneplus:
ஒன்பிலஸ் நிறுவனம் மொபைல் போன்கள் மட்டும் இல்லாமல் அந்த மொபைல்களுக்கு தேவையான அனைத்து உதிரிபாகங்களையும் விற்பனை செய்து வருகிறது. அதில் ஒன்றாக தான் இந்த பவர் பேங்குகளை விற்பனை செய்து வருகிறது. 18 வாட் திறன் சார்ஜிங்க் திறன் கொண்டதாக உள்ளது. மேலும் 12 லேயர்கள் பாதுகாப்பு கோட்டிங்க் கொண்டு வடிவமைக்கபட்டுள்ளது . Dual ouput port மற்றும் single input port கொண்டதாக உள்ளது. இதன் விலை ரூபாய் 1000 ஆக உள்ளது.
Redmi powerbank:
தற்போது அனைத்து செல்போன் நிறுவனங்களும் மொபைல் உதிரிபாகம் தயாரிப்பதில் பெரும் பங்கெடுத்து வருகின்றன. முன்னதாக் உதிரிபாகங்களுக்கு என பிரத்யேக நிறுவனங்கள் இருந்த காலம் போய் தற்போது மொபைல் நிறுவனங்களே அந்த செயலில் ஈடுபட்டு வருகின்றன. அப்படிபட்ட நிறுவனம் தான் ரெட்மி . இந்நிறுவனத்தில் இருந்து குறைவான பட்ஜெட்டில் வந்த பவர் பேங்க் தான் இது. இதன் மொத்த பேட்டரி கேபாசிட்டி 10000 ஆகும் . Dual output port கொண்டதாக உள்ளது. மேலும் Dual input port கொண்டதாகவும் உள்ளது. ஆனால் இதில் உள்ள ஒரு குறை என்று பார்த்தால் இதன் மூலம் 10 வாட் அளவுக்கு மட்டுமே output சார்ஜிங்க் திறன் உள்ளது. இதன் விலை 800 ஆக உள்ளது.
RealMe :
முன்னரே கூறியது போலதான் மொபைல்போன் நிறுவனங்கள் செல்போன் உதிரிபாகம் தயாரிப்பதில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன .அந்த வகையில் அடுத்ததாக பார்க்க இருப்பது ரியல் மீ பவர் பேங்க் குறித்து தான் . இந்த பவர் பேங்கின் மொத்த பேட்டரி திறன் 10000 ஆகும். இதன் மூலம் 18 வாட் அளவுக்கு output சார்ஜிங்க் செய்து கொள்ள முடியும். Dual output mode மற்றும் single input mode உள்ளது. இதன் விலை சரியாக 1099 ஆக நிர்ணயம் செய்யபட்டு விற்பனையாகி வருகிறது. ரியல்மீ பவர் பேங்க் 2 என்பது இதன் வேர்ஷன் ஆகும்.
குறைவான விலையில் மற்றும் காம்பேக்ட்டான பவர் பேங்கள் இவையே ஆகும். மேலும் சிறந்த தரத்துடன் தயாரிக்கபட்ட பவர் பேங்குகள் பட்ஜெட்டில் வாங்க சிறந்தவையாகும் .