திருடச் சென்ற இடத்தில் அறிவுரை கூறிய திருடன்..! போலீசில் புகார் அளிக்க போவதாக கூறி சென்ற திருடன்..!

1 min read
america-vidiyarseithigal.com

அமெரிக்காவில் சாலையில் பூட்டாமல் இருந்த காரை திருடிய திருடன் அதில் 4 வயது குழந்தை இருப்பதை கண்டதும் அந்த குழந்தையின் அம்மாவிடம் காரில் குழந்தையை தனியாக விட்டுச் செல்ல கூடாது என அறிவுரை கூறியுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள ஒரேகான் மாகாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது 4 வயது குழந்தையை அழைத்து கொண்டு காரில் ஷாப்பிங் வந்துள்ளார். ஷாப்பிங் செல்ல கடையின் முன் காரை நிறுத்திய பெண் குழந்தையை காரிலேயே விட்டு சென்றுள்ளார்.

அந்த வழியாக திருடன் ஒருவன் கார் பூட்டாமல் இருப்பதை கண்டு காரை திருடிக் கொண்டு சுமார் 10 மைல் தூரம் வரை சென்றுள்ளான். கார் திருடு போனதும் அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் காரில் குழந்தை இருப்பதை கண்ட திருடன் காரில் இருந்த தொலைதொடர்பு கருவி மூலம் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு குழந்தையை காரில் விட்டு செல்வது குற்றம் என தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்க போவதாக கூறி விட்டு காரை மற்றும் குழந்தையை அந்த இடத்திலேயே விட்டு சென்றுள்ளான்.

Spread the love
x