tea shop franchise தொடங்குவது எப்படி ?

1 min read
tea shop franchise-vidiyarseithigal.com

tea shop franchise

tea shop franchise

Franchise என்றால் என்ன ?

நாம் எப்போது ஒரு தொழிலை தொடங்க வேண்டுமென்றாலும் முதலில் அந்த தொழிலுக்கான மூலப்பொருளை மக்களிடம் சேர்க்க வேண்டும். அதாவது நம் தொழிலின் அடிப்படையான நம் தொழிலின் பெயரை மக்களிடம் சென்று சேர்க்க வேண்டும். நாம் புதிதாக ஒன்று உருவாக்கி மக்களிடம் சென்று சேர்க்க நமக்கு நீண்ட நாட்கள் எடுக்கும்.

ஆனால் முன்னரே மக்களிடம் நன்கு பரீட்சயமான பிராண்டினை நாம் தொழிலாக செய்தால் எளிதாக மக்களிடம் சென்று சேர்க்க இயலும் அதன் காரணமாக தான் பெரும்பாலான புதிதாக தொழில் தொடங்கும் நபர்கள் Franchise போன்று தொழில் model-ஐ நாடுகின்றன.

Franchise model நாம் தேர்வு செய்தோம் என்றால் நாம் தொழில் தொடங்க வேண்டிய இடம் முதல் அனைத்து Infrastruture களையும் franchise எடுக்கும் நிறுவனமே செய்து தருகின்றன.

Tea shop Franchise ஏன் எடுக்க வேண்டும் ?

இந்தியாவில் அதிகமான மக்கள் விரும்பும் பானமாக டீ இருந்து வருகிறது. வெயில் காலம், மழை காலம், குளிர் காலம் என எந்த காலத்திலும் மக்கள் அதிகம் விரும்பி அருந்துகின்றனர். பெரும்பாலான மக்கள் வேலை நேரத்தில் டீ அருந்துவதில் ஒரு விதமான energy கிடைப்பதாக நம்புகின்றனர். அதன் காரணமாக அதிகமான டீ இந்தியாவில் விற்பனை ஆகிறது.

ஏனவே Franchise பிசினஸில் நல்ல லாபம் தரக்கூடிய ஒன்றாக இந்த tea stall franchise பிசினஸ் இருந்து வருகிறது. அதிலும் கடந்த சில ஆண்டுகளில் பல Franchise டீ கடைகளை கொண்டு உருவாகி உள்ளன. எந்த காலத்திலும், எந்த நேரத்திலும் அதிக Selling நடைபெறும் ஒரு பொருள் என்பதால் இந்த Franchise அதிகபடியான மக்கள் விரும்பி மற்றும் நம்பி எடுக்கும் ஒன்றாக உள்ளது.

Tea shops Franchise தொடங்க தேவையானவை :

Area :

நாம் எந்த இடத்தில் கடையை தொடங்குகிறோமோ அதனை பொறுத்துதான் நமக்கு லாபம் என்ற ஒன்று கிடைக்கும். உதராணமாக கூட்டம் குறைவாக கூடும் இடத்தில் கடையை திறந்து வைத்துவிட்டு லாபத்தை எதிர்ப்பார்க்க முடியாது. அதற்கு பதிலாக கல்லூரிக்கு அருகிலோ, பேருந்து நிலையத்திற்கு அருகிலோ அல்லது மக்கள் அதிகமாக வந்து செல்லும் இடத்திற்கு அருகிலோ கடையினை திறந்தால் நல்ல லாபம் பார்க்கலாம் . மேலும் முதலீட்டை விரைவாக எடுக்கலாம்.

Staffs :

நீங்கள் தொடங்கும் கடைக்கு கண்டிப்பாக ஒருவர் அல்லது இரு நபர்கள் வேலைக்கு அமர்த்த வேண்டும். இல்லை நாங்களே ஒரு குழுவாக கடையை தொடங்குகிறோம் எங்களால் பார்த்துக் கொள்ள முடியும் என்றால் நீங்கள் அவ்வாறு கூட செய்யலாம். ஆனால் உங்கள் உதவிக்கு கண்டிப்பாக ஒருவர் தேவை அப்போது தான் customer கவனிக்க முடியும்.

Training :

தற்போது அனைத்து டீ Franchise நிறுவனங்களும் franchise எடுப்பவர்களுக்கு அனைத்து விதமான உதவிகளையும் வழங்குகின்றன. அதில் ஒன்று தான் அவர்கள் தயாரிக்கும் டீ யை செய்முறை படுத்தி காட்டுவது. அவர்கள் உருவாக்கும் சுவையில் நாம் எப்படி டீ யை உருவாக்க வேண்டும் என்பதனை டீ Franchise எடுக்கும் நிறுவனம் நமக்கு சொல்லி கொடுப்பார்கள். இதன் மூலம் நாமே கூட சுவையான டீ யை உருவாக்க முடியும் .

Investment :

பொதுவாக ஒரு ரெஸ்டாரண்ட் வடிவிலான டீ கடையை திறக்க வேண்டும் என்றால் நமக்கு 7 முதல் 8 லட்சம் வரை முதலீடு தேவைப்படும். மேலும் நாம் பொருட்களை தேர்ந்தெடுப்பது என பல வேலைகள் செய்ய வேண்டும். ஆனால் Franchise  மூலம் செல்லும் பட்சத்தில் நமக்கு 3- 4 லட்சம் வரை முதலீடு ஆகிறது.

நமக்கு தேவையான தொழிநுட்பம் மற்றும் அலங்கார வேலைகள் என அனைத்தையும் அந்த நிறுவனமே முடித்து தருகிறது. அது மட்டுமின்றி நாம் சுட்டிக்காட்டும் இத்தில் கடையை தொடங்கலாமா அல்லது வேறு இடத்தில் தொடங்கலாமா என அனைத்து உதவிகளையும் அவர்களே வழங்குகின்றனர். நாம் எவ்வளவு கால அளவில் முதலீட்டை திரும்ப பெறலாம் என்பதனையும் அவர்களே குறிப்பிட்டு தருகின்றனர்.

குறிப்பாக நாம் Franchise எடுக்கும் போது கவனிக்க வேண்டியது royalty அதாவது நமக்கு கிடைக்கும் வருவாயில் எத்தனை சதவீதத்தை Franchise நிறுவனம் நம்மிடம் இருந்து பெருகிறது என்பதாகும். அதனை வைத்து நம்முடைய நிகர லாபத்தை கணக்கிட முடியும்.

Spread the love
x