காரசாரமான ஊறுகாய் அதுவும் கத்திரிக்காயில் எப்படி செய்வது பார்க்கலாம்..!

1 min read
food-vidiyar

ஊறுகாய் இல்லாத மத்திய உணவு இருக்கிறதா… அதுவும் தயிர் சாதத்திற்கு பெஸ்ட் காம்பினேஷன் ஊறுகாய்தான. கத்தரிக்காயை வைத்து ஒரு சூப்பரான ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள் :

கத்திரிக்காய்                 – 500 கிராம்
மஞ்சள்தூள்                     – கால் டீஸ்பூன்
புளி                                     – எலுமிச்சம் பழ அளவு
மிளகாய்தூள்                 – 50 கிராம்
வெந்தயத்தூள்               – ஒரு டீஸ்பூன்
எண்ணெய்                      – 100 கிராம்
உப்பு                                  – தேவையான அளவு
வெந்தயம்                       – அரை டீஸ்பூன்
கடுகு                                – ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள்       – கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்         – 2
எண்ணெய்                     – ஒரு டீஸ்பூன்

food-vidiyar

செய்முறை:

முதலில் கத்திரிக்காயை நன்றாக சுத்தம் செய்து, துடைத்து, அரிந்துக்கொள்ளவும். பிறகு எலுமிச்சம் பழ அளவு புளியைக் கரைத்து, அதை வடிகட்டி, அதில் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், வெந்தயத்தூள், சேர்த்து, கத்திரிக்காயுடன் கலக்கவும்.

இந்த கலவையை அப்படியே இரவு முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் காலையில் புளிக் கரைசலை வடிகட்டி, கத்திரிக்காயை எடுத்து பிளாஸ்டிக் ஷீட்டில் ஒரு நாள் முழுக்க வெயிலில் வைத்து எடுக்கவும். பிறகு, அதில் 100 கிராம் எண்ணெயைக் காய்ச்சி ஊற்றிக் நன்றாக கலக்கவும்.

பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும் அதில் கடுகு, வெந்தயம், பெருங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும். இந்த தாளிப்பை கத்திரிக்காயில் போட்டுக் கலக்கவும். சுவையான கத்திரிக்காய் ஊறுகாய் தயார்.

Spread the love
x