Tamilnewsonline: பழைய சோறு இருந்தால் போதும்..!அறுவை சிகிச்சையே வேண்டாம்…! அசத்தும் அரசு மருத்துவமனை..!

1 min read
tamil news online-vidiyarseithigal.com

Tamilnewsonline

நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் எல்லாம் 70ஐ கடந்தும் ஆரோக்கியமாக உள்ளனர். அதற்கு பெரிய காரணமாக கூறப்படுவது அவர்களின் உணவு வழக்கம் தான். பலர் பழைய சோறு தான் தங்கள் ஆரோக்கியத்தை காத்ததாக இன்றளவும் கூறுகிறார்கள்.

அப்படிப்பட்ட பழைய சோற்றை இன்று நாம் மறந்துவிட்டோம். பழைய சோற்றை சாப்பிடுவதின் மூலம் குடல் சார்ந்த பிரச்சனைகள் தீர்வு கிடைக்கிறது என்றும் அறுவை சிகிச்சை  செய்ய வேண்டிய நிலையில் உள்ள நோயாளிகளை அறுவை சிகிச்சை செய்யாமல் பழைய சோறு காப்பாற்றி வருவதாக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

பழைய சோறு விடுத்ததன் மூலம் குடலுக்கு கிடைக்க வேண்டிய நார் சத்து, இரும்பு சத்து, மற்றும் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களும் கிடைக்காமல் போயுள்ளது. இதனால் குடல் சார்ந்த பிரச்சனைகள், தூக்கமின்மை ஆகியவை ஏற்படுகிறது.

tamil news online-vidiyarseithigal.comtamilnewsonline

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவர்கள் குடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு பழைய சோறு கொண்டு ஆராய்ச்சி ஒன்று நடத்தி உள்ளனர். அதில் நாம் சாதாரணமாக நினைக்கும் பழைய சோற்றில் நன்மை பயக்கும் ஸ்டெப்சோ, ஈஸ்ட், பைடோ பேக்டிரியல் போன்ற நுண்ணுயிர்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

நம் உடலில் நன்மை பயக்கும் பேக்டாரியாக்கள் இல்லாததால் தான் குடல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுகிறது என்பதை கண்டுப்டித்துள்ளனர். ஆனால் பழைய சோறு மூலம் கிடைக்கும் பேக்டரியாக்கள் மூலம் பலரின் குடல் சார்ந்த பிரச்சனைகள் தீர்ந்துவிடுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Spread the love
x