தமிழ் எழுத படிக்க தெரிஞ்சா போதும்..!ரூ.58 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை..!
1 min readதமிழ்நாடு செயலகம் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.58 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழில் நன்கு எழுத, படிக்கத் தெரிந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.
நிறுவனம்– தமிழக அரசு மாற்றுத் திறனாளிகள் துறை
பணி– Office assistant ,
காலி பணியிடம் –2
விண்னப்பிக்க கடைசி நாள்- 10-12-2021
ஊதியம்;
ரூ.15,700 முதல் ரூ.58,100 மாதம்
கல்விதகுதி:
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று தமிழில் நன்கு எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
வயது வரம்பு:
விண்ணப்பதாரர் 18 முதல் அதிகபட்சம் 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 10.12.2021 தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
அரசு சார்புச் செயலாளர், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, தலைமைச் செயலகம், சென்னை – 600 009.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: https://cms.tn.gov.in/sites/default/files/job/OA_Recruitment_251121.pdf
இணைய முகவரி- https://www.tn.gov.in/
தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 பற்றிய தகவல்களையும் இங்கே பெறுவீர்கள். அரசு வேலைகளில் ஆர்வமுள்ள ஆர்வலர்கள் தொடர்ந்து www.vidiyarseithigal.com ஐ சரிபார்த்து, அனைத்து தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் மத்திய அரசு வேலைவாய்ப்புகள் , பாதுகாப்பு வேலைவாய்ப்புகள், போன்ற சமீபத்திய தமிழக அரசு வேலைவாய்ப்புகள் 2021 பற்றிய அனைத்து தகவல்களையும் பெறவும்.