Tamil online news: படத்தில் வருவது போல ஒரு நாள் முதல்வரான மாணவி..!

1 min read
tamil online news-vidiyarseithigal.com

Tamil online news;

முதல்வன் படத்தில் வருவது போல 19 வயது மாணவி ஒருவர் ஒருநாள் முதல்வராகி உள்ளார்.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜீன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் முதல்வன். அதில் அர்ஜீன் டிவியில் கேமராமேனாக வேலைபார்த்து வருவர். ஒருநாள் எதிர்பாரா விதமாக ஒரு நாள் முதல்வராகி முதலமைச்சர் முதல் அரசு அதிகாரிகள் வரை அனைவரிடமும் தப்பினை தட்டிக் கேட்பார்.

தமிழ் சினிமாவில் அரசியல் சார்ந்த படங்களில் சிறந்த படமாக இன்றளவும் முதல்வன் படம் இருந்து வருகிறது. இந்நிலையில் அப்படத்தில் வருவது போல 19 வயது பள்ளி மாணவி சிருஷ்டி கோஸ்வாமி இன்று ஒருநாள் உத்தரகாண்ட் மாநில முதல்வராக செயல்படுகிறார். .

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் கிராமத்தை சேர்ந்தவர் சிருஷ்டி கோஸ்வாமி. இவரது தந்தை வியாபாரியாக உள்ளார். தாய் அங்கன்வாடி மையத்தில் பணியாற்றி வருகிறார். இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இன்று இவருக்கு முதல்வராக பணியாற்ற வாய்ப்பளிக்கபட்டுள்ளது.

மேலும் உத்தரகாண்ட் மாநில வரலாற்றிலேயே முதல் பெண் முதல்வர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. சிருஷ்டி முதல்வராக செயல்படும் போது அம்மாநில முதல்வரும் உடன் இருப்பார். இந்த நிகழ்ச்சி இன்று 12மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது.

முன்னதாக இவர் 2018ம் ஆண்டு முதல் உத்தரகாண்ட் குழந்தைகள் சட்டசபையில் முதல்வராக செயல்பட்டு வருகிறார்.

Spread the love
x