tamil online news: SBI debit card இருக்கா? உடனே இதை செய்யுங்க..!
1 min readtamil online news
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளராக இருந்தால் கண்டிப்பாக இதை படிக்க வேண்டும் . நாட்டின் மிகபெரிய பொதுத்துறை வங்கி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு சர்வதேச பணபரிவர்த்தனைகளில் சிக்கல்களை எதிர்கொண்டால் உடனடியாக உங்கள் பான் அட்டை தொடர்பான விவரங்களை வங்கிக் கணக்கில் புதுப்பிக்கவும் என தெரிவித்துள்ளது.
நீங்கள் பான் எண்ணை புதுப்பிக்கவில்லை என்றால் பரிவர்த்தனைகளில் சிக்கல் இருக்கலாம் என வங்கி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அந்த பதிவில் சர்வதேச பரிவர்தனைகள் (International Transactions) சிக்கல் உள்ளதா? Sbi டெபிட் கார்டு மூலம் எந்த வித சிக்கலும் இன்றி வெளிநாட்டு பரிவர்த்தனைகள் மேற்கொள்ள உங்கள் பான் விவரங்களை வங்கி கணக்கில் புதுப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Having trouble with the international transactions? Update your PAN details in the bank’s record to enjoy seamless foreign transactions through SBI Debit Card.#SBI #StateBankOfIndia #DebitCard #PANDetails pic.twitter.com/kyo9wBMGuc
— State Bank of India (@TheOfficialSBI) January 19, 2021
மேலும் அந்த டிவிடுடன் ஒரு புகைப்படத்தையும் இணைத்துள்ளது. ATM , Pos / E-காமர்ஸ் மூலம் சர்வதேச பரிவர்தனைகளை மேற்கொள்ள பான் எண்ணை உங்கள் வங்கி கணக்குடன் புதுப்பிக்கவும் என தெரிவிக்கபட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு கிளிக் செய்யவும்
பான் எண்ணை Offline ல் புதுப்பிக்க நீங்கள் வங்கி கிளைக்கு செல்ல வேண்டும். அங்கு சென்று ஒரு படிவத்தை பெற்று அதனை பூர்த்தி செய்து பான் அட்டை நகலை இணைத்து சமர்பிக்க வேண்டும்.