tamil online news: 4 கிலோ நான் வெஜ் சாப்பிடுங்க..! என்பீல்ட் பைக் ஒட்டிட்டு போங்க..! சோலோவாக வென்ற சோலாப்பூர் இளைஞர்..!

1 min read
tamil online news-vidiyarseithigal.com

tamil online news

புனே நகரத்தில் உள்ள அதுல் வாய்கர் எனபவர் உணவகம் ஒன்று நடத்தி வருகிறார். இவரின் உணவகத்தில் வழங்கப்படும் பிரமாண்ட தட்டுகளில் உள்ள உணவு மிகவும் பிரபலமானது. அதிலும் ஸ்பெஷல் ராவண் சாப்பாடு, புல்லட் சாப்பாடு போன்றவை மிகவும் வரவேற்ப்பை பெற்றது.

ஒவ்வொரு வகையான உணவும் சுமார் ரூ.2,500 வரை மதிப்புஅடையது. கொரோனா தாக்கத்தால் அவரின் உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் அளவு குறைந்தது. அதன் காரணமாக மீண்டும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி வாடிக்கையாளர் ஒருவர் 4 கிலோ நான் வெஜ் உணவை ஒரு மணி நேரத்தில் சாப்பிட்டால் ராயல் என்பீல்ட் புல்லட் பைக் பரிசாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். அந்த உணவு தட்டில் 12 வகையான உணவுகள் இடம் பெற்றிருக்கும்.

tamil online news-vidiyarseithigal.com

அவை Fried surmai, pomfret fried fish, chicken tandoori, dry mutton, grey mutton, chicken masala, prawn briyani உள்ளிட்ட 12 வகையான உணவுகள் அந்த தட்டில் இருக்கும் என தெரிவிக்கபட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் இந்த தட்டில் உள்ள உணவு வகைகளை காலி செய்தால் ரூ.1.12 லட்சம் மதிப்புள்ள புல்லட் பரிசு என தெரிவிக்கபட்டுள்ளது.

பலர் இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற முயன்றனர் . ஆனால் அதில் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். சோலாப்பூரை சேர்ந்த அந்த இளைஞரின் பெயர் சோம்நாத பவார் என்பதாகும். பலர் தொடர்ந்து போட்டியில் பங்கேற்று வருகின்றனர்.

Spread the love
x