tamil news paper today: ஹெலிகாப்டர்..! கார்..! ரோபோ..! வைரலாகும் மதுரை வேட்பாளரின் வாக்குறுதிகள்..!

1 min read
tamil news paper today-vidiyarseithigal.com

tamil news paper today

தமிழக தேர்தல் களம் படுஜோராக சூடுபிடித்துள்ளது. முன்னனி கட்சிகள் அதன் வேட்பாளர்களுக்கு அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பல தொகுதிகளில் கட்சியை தாண்டி சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

அவர்களின் வாக்குறுதிகள், தேர்தல் வேட்டுமனு தாக்கல் போன்ற விஷயங்கள் வைரலாகி வருகின்றன. அப்படியாக தான் மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிடும் சரவணின் வாக்குறுதிகள் வைரலாகி வருகின்றன.

மதுரை தெற்கு தொகுதி

சரவணன் அனுப்பாடியில் வசித்து வருகிறார். இவர் மார்கெட்டிங் , உள்ளூர் செய்திதாள் நிருபர் என பல வேலைகள் செய்து வருகிறார். மதுரை தெற்கு தொகுதியில் சுயேட்ச்சையாக போட்டியிடும் இவர் வாக்குறுதிகள் அளித்து ஒட்டியுள்ள போஸ்டர்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் வாக்குறுதிகள்;

அந்த வாக்குறுதி போஸ்டரில் தொகுதி மக்கள் அனைவருக்கும் ஐபோன், மாடி வீடு, வீட்டிற்கு ஒரு கார், ஒரு ஹெலிகாப்டர், 100 பயணமாக நிலாவுக்கு சுற்றுலா, தொக்தியை குளிர்ச்சியாக வைத்திருக்க செயற்க்கை பனிமலை, என பல கூறப்பட்டுள்ளது.

மேலும் பெண்களின் திருமணத்திற்கு 100 சவரன் நகை , இல்லத்தரசிகளுக்கு வீட்டு வேலைகளை செய்ய ரோபோ என பல வாக்குறுதிகள் கூறப்பட்டுள்ளது. இது குறித்து நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பலருக்கு தெரியவில்லை அதனை அறிந்து கொள்ளவே சுயேட்சையாக போட்டியிடுவதாக கூறியுள்ளார்.

tamil news paper today

தேர்தல் செலவுக்கு கூட 20 ஆயிரம் கடன் வாங்கி அதில் 10 ஆயிரம் டெபாசிட் கட்டியுள்ளதாக கூறியுள்ளார். 5 ஆண்டுக்கு ஒரு முறை இப்படி10 ஆயிரம் செலவு செய்து அரசியல் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார். சாத்தியமில்லாத திட்டங்களை அறிவித்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் கடந்த 50 ஆண்டுகளாக பல இலவச திட்டங்களை அறிவித்து அதனை நிறைவேற்றாமல் உள்ளனர்.

இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இப்படி செய்ததாக கூறியுள்ளார்.

Spread the love
x