tamil news online today: பாய்பிரண்ட் இல்லையா? அப்ப கல்லூரிக்கு வராதீங்க..! தீயாய் பரவிய நோட்டீசால் அதிர்ச்சியில் மாணவிகள்..!
1 min readtamil news online today
ஆக்ராவில் உள்ள பிரபலமான கல்லூரி ஒன்றில் பிப்ரவரி 14ம் தேதிக்குள் மாணவிகளின் பாதுகாப்பு கருதி பாய்பிரண்ட் இல்லாவிட்டால் கல்லூரிக்கு வரவேண்டாம் என்ற நோட்டீஸ் தீயாய் பரவியது. இதனை கண்ட மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆக்ராவில் உள்ள செயிண்ட் ஜான்ஸ் கல்லூரி மிகவும் பிரபலமான கல்லூரி. அந்த கல்லூரியின் லோகோ பதிக்கபட்ட லெட்டர் பேட்டில் , பேராசிரியர் ஆசிஷ் ஷர்மா கையெழுதிடப்பட்ட நோட்டீஸ் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
அந்த நோட்டீஸில் பிப்ரவரி 14ம் தேதிக்குள் மாணவிகள் குறைந்தது ஒரு பாய்பிரண்டாவது இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இது பாதுகாப்பு கருதி அறிவிக்கபடுகிறது என்றும் சிங்கிள் மாணவிகள் கல்லூரிக்குள் வர அனுமதி இல்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த செய்தி மாணவிகள் இடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை பற்றி மாணவிகள் சிலர் பெற்றோர்களிடம் கூறி உள்ளனர். அதன் பின் அவர்கள் கல்லூரி நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்து சென்றுள்ளனர். உடனடியாக இது குறித்து கல்லூரி பிரின்சிபல் எஸ்.பி.சிங்கின் கவனத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.
இது பற்றி விசாரணை மேற்கொண்டு அவர் விளக்கமளித்துள்ளார். அதில் கல்லூரி நிர்வாகத்தின் பெயரை கெடுக்க எண்ணி சிலர் இந்த செயலை புரிந்துள்ளனர். எனவே மாணவிகள் அந்த நோட்டீஸ் பற்றி எண்ண வேண்டாம். அதனை புறக்கணியுங்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும் பேராசிரியர் ஆசிஷ் ஷர்மா என்ற பெயரில் யாரும் இங்கு பணியாற்றவில்லை எனவும் இதனை செய்தவர்கள் யார் என்று கண்டுபிடிக்கபட்டு தண்டிக்கபடுவர் என அவர் தெரிவித்துள்ளார்.