Tamil news online today: மீண்டும் பயன்பாட்டு வருவோம் ..! நிறுவனத்தை மூடிய டிக்டாக்..!
1 min readTamil news online today
சீனாவை சேர்ந்த டிக்டாக் நிறுவனம் இந்தியாவில் உள்ள அதன் கிளையை மூடி உள்ளது. அதன் காரணமாக 2 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர்.
இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறி டிக்டாக் உள்ளிட்ட பல சீன செயலிகளை இந்திய அரசு தடை விதித்தது. அதன் காரணமாக இந்தியாவில் சீன செயலிகளை பயன்படுத்துவது நிறுத்தப்பட்டது.
இதனிடையே சமீபத்தில் மத்திய அரசு விடுத்த அறிக்கையில் 59 சீன செயலிகளை நிரந்தரமாக தடை செய்வதாக அறிவித்தது. இதனால் சீனாவின் செயலியான டிக்டாக் அதன் இந்திய கிளையை மூடி உள்ளது. மேலும் தங்களிடம் பணி புரிந்த ஊழியர்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி உள்ளது.
அதில் இந்தியாவில் மீண்டும் டிக்டாக் பயன்பாட்டிற்கு வரும் என நாங்கள் நம்புகிறோம் .ஆனால் அதற்கான கால அளவு தெரியவில்லை இந்திய கிளையை மூடுவதாக அறிவித்துள்ளது. டிக்டாக் நிறுவனம் மூடியதால் இந்தியாவில் உள்ள கிளையில் பணியாற்றிய 2 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர்.