Tamil news online: சீனாவில் மீண்டும் ஊரடங்கு..!
1 min readtamil news online :
கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் உள்ள யூகான் நகரில் இருந்து கொரோனா தொற்று பரவ தொடங்கியது. அதன் பின் கொரோனா தொற்றால் உலக நாடுகள் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கபட்டும், லட்சகணக்கான மக்கள் உயிரைவிட்டும் உள்ளனர்.
கொரோனா பாதிப்பு தொடங்கியது முதல் உலக நாடுகள் அனைத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து கொரோனா தொற்றை குறைக்க போராடின. பின்னர் பாதிப்புகள் குறைய தொடங்கியது மெல்ல மெல்ல ஊரடங்கு திரும்ப பெறப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு கிளிக் செய்யவும்
முதன் முதலில் கொரோனா கண்டறியப்பட்ட சீனா அதிலிருந்து வேகமாக வெளியே வந்தது. இருப்பினும் அவ்வபோது பாதிப்புகள் கண்டறியப்பட்டு தான் வருகின்றன. புத்தாண்டையோட்டி சீன மக்களிடையே உரையாற்றிய அதிபர் ஜின்பிங் கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் சீனா வெற்றி பெற்று விட்டதாக அறிவித்தார்.
இந்நிலையில் சீனா தலைநகர் ஆன பெய்ஜிங்கில் டாக்சிங் என்னும் இடத்தில் நாள்தோறும் புதிதாக பலருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. இதனையடுத்து கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பெய்ஜிங்கில் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.