tamil news online: சென்னையில் 30% மாணவர்களுக்கு என்னாச்சு? கல்விதுறை அதிகாரிகள் விசாரணை..!

1 min read
tamil news online-vidiyarseithigal.com

tamil news online

கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 300 நாட்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தது. இருப்பினும் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கபட்டு வந்தன.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தமிழகம் முழுவதும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கபட்டன. உரிய பாதுக்காப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மாணவர்கள் பள்ளிக்கு வர தொடங்கி உள்ளனர்.

வகுப்புகள் தொடங்கிய முதல் நாளே 80% மாணவர்கள் பள்ளிகளுக்கு வந்துள்ளனர். தற்போது இந்த எண்ணிக்கை உயர்ந்து 90% ஆக மாறியுள்ளது. 13 ஆயிரம் பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதும் 19 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

மேலும் ஒவ்வொரு பள்ளியிலும் வருகை தராத மாணவர்களின் சதவீதம் 10 முதல் 15 ஆக உள்ளது. மாணவர்களின் வருகை பதிவு கட்டாயம் இல்லை என்றாலும் பள்ளிக்கு வர விருப்பம் இல்லாத மாணவர்கள் வீட்டில் இருந்தே படிக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.

பள்ளிக்கு வராத மாணவர்களின் விவரங்களை எடுத்து அவர்களின் பெற்றோர்களிடம் ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் பேசி என்ன காரணத்திற்காக அவர்கள் பள்ளிக்கு வரவில்லை என கேட்டு வருகின்றனர். சென்னையில் மட்டும் அரசு , அரசு உதவிபெறும்  பள்ளிகள், தனியார் பள்ளிகள் என 679 உள்ளன.

இவற்றில் 1 லட்சம் மாணவ- மாணவிகள் 10 மற்றும் 12ம் வகுப்புகள் படித்து வருகின்றனர். தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அதிகளவில் வருவதாகவும், மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 30% வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் எந்த காரணத்திற்காக வரவில்லை என பெற்றோர்களிடம் கேட்டறிந்து வருவதாக அதிகாரிகள் கூறினர்.

மேலும் இதைப்பற்றி அதிகாரிகள் கூறுகையில் பள்ளி திறந்த முதல் நாளில் 10ம் வகுப்பு 61% மாணவர்களும், 12ம் வகுப்பு 62% மாணவர்களும் வருகை தந்ததாகவும் தற்போது அது 70% ஆக உயார்ந்துள்ளது என தெரிவித்தனர். மாநகராட்சி பள்ளிகளில் 10ம் வகுப்பு மாணவர்கள் 6,589 பேரும், 12ம் வகுப்பு மாணவர்கள் 5,122 பேரும் படித்து வருகின்றனர் என கூறினர்.

மேலும் செய்திகளுக்கு கிளிக் செய்யவும் 

tamil news online-vidiyarseithigal.com

tamil news online

இது குறித்து மேலும்  கூறுகையில் 15% மாணவர்கள் பள்ளிக்கு வர விரும்பவில்லை. பல்வேறு காரணங்களால் அவர்கள் வரவில்லை. கொரோனா தடுப்பு நடவடிக்கை பற்றி மாணவர்களுக்கும் , பெற்றோர்களுக்கும் விளக்கி வருகிறோம் என தெரிவித்தனர்.

இரண்டு வகையில் மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இருக்கிறார்கள் நிரந்தரமாக மற்றும் கொரோனா அச்சத்தினால் அனைவரது விவரமும் சேகரிக்கபட்டு விளக்கம் கேட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து கல்வித்துறை இயக்குனர் கூறுகையில், மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கபட்டு உள்ளதாகவும், மாணவர்களின் கல்வியுடன் நலனிலும் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

Spread the love
x