Tamil news:கிழிந்த ரூபாய் நோட்டு இருக்கா…! ரிசர்வ வங்கி சொன்ன ஹப்பி நியூஸ்..!
1 min readTamil news
முதலில் கிழிந்த ரூபாய் நோட்டுகளை கொடுத்து மாற்றுவதற்கு அந்தந்த மாநில தலைநகரங்களில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. இப்படி இருந்த காரணத்தினால் மாநில தலைநகரங்களில் இருந்த மக்கள் இதுபோன்ற கிழிந்த நோட்டுகளை மாற்ற எளிமையாக இருந்தது. ஆனால் கிராம புற மக்கள் கிழிந்த நோட்டுகளை மாற்றுவதில் சிக்கல் இருந்து வந்தது.
இந்த நிலை காரணமாக மாதம் தோறும் நாடு முழுவதும் பல கோடி ரூபாய் நோட்டுகள் வீணாகி வருவது ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டது. இப்படி இருக்கும் போது தான் கடந்த ஏப்ரல் மாதம் பொதுமக்கள் கிழிந்த நோட்டுகளை மாற்ற வசதியாக தேசிய மயமாக்கபட்ட வங்கிகளில் அவற்றின் கிளை வங்கிகள், தனியார் வங்கிகள் , கூட்டுறவு வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கபட்டது.
Tamil news
ஆனால் கொரோனா உள்ளிட்ட காரணங்களால் மக்கள் வங்கிக்கு செல்ல முடியாத நிலை இருந்து வந்தது. இதனிடையே பொதுமக்கள் கிழிந்த ரூபாய் நோட்டுகளை எந்த வங்கியிலும் வேணாலும் கொடுத்து மாற்றி கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அனைத்து வங்கிகளுக்கும் தெரிவிக்கபட்டுள்ளது.
மேலும் பொதுமக்களுக்கு கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுக்க உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும், போதுமான அளவு சில்லரை நாணயங்களை வழங்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்