tamil nadu election 2021: வெளியானது தமிழகத்தின் முழு வாக்காளார் பட்டியல் ..! உங்க தொகுதியில் எத்தனை பேர் ? முழு விவரம் ..!

1 min read
tamilnadu election 2021-vidiyarseithigal.com

tamil nadu election 2021

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது . அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாஹீ வெளியிட்டார்.

தமிழகத்தில் மொத்தம் 6,26,74,446 வாக்காளர்கள் உள்ளனர். புதிதாக 8,97,694 வாக்காளர்கள் சேர்க்கபட்டுள்ளனர். ஆண் வாக்காளர்கள் 3,08,38,473 பேரும், பெண் வாக்காளர்கள் 3,18,28,727 பேரும் , மூன்றாம் பாலினத்தவர்கள் 7,246 பேரும் இடம் பெற்றுள்ளனர்.

tamil nadu election 2021-vidiyarseithigal.com

மேலும் வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்க்க 21,82,120 விண்ணப்பங்கள் பெறபட்டு, அதில் 21,39,395 விண்ணப்பங்கள் ஏற்க்பட்டுள்ளன. இறப்பு, இடமாற்றம், இரட்டைபதிவு உள்ளிட்ட காரணங்களால் 5,09,307 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கபட்டுள்ளன.

இந்த முறை 18 முதல் 19 வயது புதிய வாக்காளர்கள் 8,97,694 பேர் உள்ளனர். அதில் ஆண் வாக்காளர்கள் 4,80,953 பேரும் , பெண் வாக்காளர்கள் 4,16,423 பேரும் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 318 பேரும் உள்ளனர்.

tamil nadu election 2021 புதிய வாக்காளர்கள் அதிகமாக சேர்ந்த முதல் மாவட்டமாக சென்னையும், இரண்டாம் மாவட்டமாக சேலமும், மூன்றாம் மாவட்டமாக திருவள்ளூரும் உள்ளன. வாக்காளர்கள் பட்டியல் குறித்த விவரங்களை https://www.elections.tn.gov.in/  இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

Spread the love
x