Tamil cinemanews: அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை..! விளக்கம் அளித்த அனிகா சுரேந்திரன்..!

1 min read
tamil cinemanews-vidiyarseithigal.com

tamil cinemanews:

என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் போன்ற படங்களில் நடிகர் அஜித்திற்கு மகளாக நடித்து பிரபலமடைந்தவர் அனிகா சுரேந்திரன். இவர் கவுதம் மேனன் இயக்கிய குயின் வெப் சீரிசில் இளம் வயது ஜெயலலிதாவாக நடித்து மிகவும் பேசப்பட்டார்.

இந்நிலையில் தான் சமூக வலைத்தளங்களில் கருப்பு நிற உடையில் பெண் ஒருவர் கவர்ச்சி நடனம் ஆடும் வீடியோ வேகமாக பரவி வருகிறது. அந்த பெண் பார்பதற்கு அனிகா சுரேந்திரன் போல இருந்தார். அதனை கண்ட ரசிகர்கள் குழந்தை நட்சத்திரமாக இருந்த அனிகா இப்படி மாறிவிட்டாரா என அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகளுக்கு கிளிக் செய்யவும்

தற்போது அந்த வீடியோ குறித்து அனிகா சுரேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். நான் ஒருபோதும் இப்படி எல்லாம் பண்ணமாட்டேன் என்றும் அது மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக பேசிய அவர் அந்த வீடியோவால் நான் மிகுந்த வேதனை அடைந்துள்ளதாகவும், இதை பற்றி என்ன சொல்வது என எனக்கு தெரியவில்லை என அவர் தெரிவித்துள்ளார். ஆன்லைனில் இருந்து அந்த வீடியோவை நீக்க நடவடிக்கை எடுக்கபட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

Spread the love
x