swine flu pandemic:இன்னும் கொரோனாவே முடியல அடுத்து இதுவா..! திருப்பூரில் அதிர்ச்சி..!

1 min read
swine flu pandemic-vidiyarseithigal.com

swine flu pandemic

நாடு முழுவதும் பரவிய கொரோனா தொற்று தற்போது தான் மெல்ல குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 15 வேலம்பாளையம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு பன்றி காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. அவர் கோவை மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கபட்டுள்ளார்.

இந்நிலையில், அவரது வீடு தனிமைபடுத்தப்பட்டு குடும்ப உறுப்பினர்களுக்கும் பரிசோதனை செய்து உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவை மாநகராட்சி பகுதியில் பன்றி காய்ச்சலுக்கு இருவர் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

swine flu pandemic-vidiyarseithigal.com

swine flu pandemic

காய்ச்சல் அதிகமாக இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையில் சென்று பரிசோதிக்க மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது. அதுபோல வீட்டின் சுற்றுப்புற பகுதிகளில் மழை நீர் தேங்காமல் பார்த்து கொள்ள தெரிவிக்கபட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சுப்பிரமணியன், கோவையில் இரண்டு நபர்களுக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழக எல்லையோர மாவட்டங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. கேரள மாநிலத்தில் இருந்து வரக்கூடியவர்களுக்கு உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளபடுகிறது .

மேலும் பன்றிகாய்ச்சலால் தமிழகத்தில் தற்போது எந்த அச்சுறுத்தலும் இல்லை என தெரிவிக்கபட்டுள்ளது,.

Spread the love
x