startup tips for beginners: நீங்கள் Startup தொடங்கபோறீங்களா இந்த தவறலாம் செஞ்சிடாதீங்க..!

1 min read
startup tips for beginners-vidiyarseithigal.com

startup tips for beginners

சிலருக்கு வேலைக்கு செல்வதை விட வேலை தரும் அளவுக்கு முன்னேற வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகவே இருக்கும் . இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் வேலைக்கு செல்வதை காட்டிலும் புதிதாக தொழில் தொடங்குவதையே ஆசையாக வைத்துள்ளனர். நீங்கள் எந்த தொழில் தொடங்கினாலும் சரி உங்களுக்கான சில நெறிமுறைகள் உள்ளன.

அந்த நெறிமுறைகள் நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும் அப்போது தான் நாம் வெற்றி காண முடியும் . அதில் தொழில் தொடங்க கூடிய விஷயங்களில் கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டியவை உள்ளன. ஆனால் என்ன தவறு செய்ய கூடாது என பலருக்கு தெரியாமல் இருக்கலாம். அவர்களுக்கான ஒரு பதிவுதான் இது. எப்போதுமே ஸ்டாட் அப் தொடங்கும்போது செய்ய கூடாது சில விஷயங்களை இந்த பதிவில் காணலாம்.

Target audience :

டார்கட் ஆடியன்ஸ் என்றால் என்ன? ஒரு பொருளை ஒரு குறிப்பிட்ட நபர்களிடம் மட்டுமே விற்க முடியும் . பிற நபர்களுக்கு அந்த தேவைபடாமல் இருக்கலாம் . ஆனால் அவர்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு கூடுதல் பொருட்களை நாம் உற்பத்தி செய்து விட்டு அதனை விற்க முடியாமல் தவிக்க நேரிடும். ஒரு பொருளை யாரை நோக்கி நாம் விற்க முயல்கிறோமோ அவர்கள் தான் டார்கெட் ஆடியன்ஸ்.

உதாரணமாக ஒரு உணவகம் திறக்க போகீறீர்கள் என்றால் இளைஞர்களை கவரும் வகையில் உணவுகள் தயாரிக்க போகீறீர்களா அதாவது பாஸ்ட் புட் அல்லது பெரியவர்களை கவரும் வகையில் இட்லி போன்ற உணவுகளை தயாரிக்க போகீறீர்களா அல்லது இரண்டையும் சேர்த்து செய்ய போகீறீர்களா என தெளிவுப்படுத்தி கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாமல் இளைஞர்களை கவரும் வகையில் ஒரு உணவகத்தை தொடங்கிவிட்டு பெரியவர்களுக்கான உணவுகளை அதிக அளவில் விற்பனை செய்தால் நிச்சயம் தவறாக முடியும்.

startup tips for beginners-vidiyarseithigal.com

startup tips for beginners

Bad Location :

லோகேஷன் எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் சரி அதற்கான சரியான இடம் அமைந்தால் தான் நன்றாக செயல்படும். தேவையான இடத்தில் தேவைப்பட்டதை தொடங்கினால் தான் மக்களிடம் நல்ல வரவேற்ப்பு இருக்கும் . ஒரு சில இடங்களில் ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் கால்ப்போக்கில் அதன் போக்கு மாறிவிடும் . அதுபோல கூட நேராமல் நல்ல இடத்தில் தொடங்க வேண்டும்.

உதாரணமாக ஒரு நல்ல பிரம்மாண்டமான துணிக்கடை அதனை பெரிய நகராட்சி அல்லது மாநகராட்சி பகுதிகளில் திறக்க கூடிய பிரம்மாண்டமான துணிக்கடையை ஒரு பேரூராட்சி அல்லது கிராம அளவிலோ திறந்துவிட்டு கூட்டம் வரும் என்று எதிர்பார்க்க கூடாது. கடை திறந்த சில காலம் கூட்டம் அலைமோதாலும் அதன் பின் அந்த பகுதியில் உள்ள சிலர் மட்டுமே வருவர். ஒரு வேலை  நகராட்சி பகுதிகளில் திறந்தால் கூட கூட்டம் வரும் இடங்களான பேருந்து நிலையம் அருகில், மார்கெட் பகுதிகளில் திறக்க வேண்டும் இல்லை என்றால் அங்கு கூட கூட்டம் குறைவாகவே வரும். எனவே லோகேஷன் என்பது மிக மிக முக்கியமான ஒன்றாகும்.

startup ideas in tamil: புதிதாக தொழில் தொடங்க போறீங்களா ..! உங்களுக்கான ஸ்பெஷல் டிப்ஸ்..!

Hiring Bad Employees:

ஒரு தொழில் நன்றாக செயல்பட வேண்டுமென்றால் முதலாளி மட்டும் நன்றாக வேலை செய்பவராகவும் , தெரிந்தவராகவும் இருந்தால் போதாது. அங்கு வேலை செய்யும் பணியாளர்களும் நன்றாக பணிபுரிபவராக இருக்க வேண்டும். உங்களிடம் தரம் வாய்ந்த பொருட்களை மட்டும் வைத்து கொண்டு வியாபாரத்தை பெருக்கி விட முடியாது. உங்களிடம் பணிபுரிபவர்கள் வருகின்ற வாடிக்கையாளர்களிடம் எப்படி பழகுகிறார்கள் என்பதனை பொறுத்துதான் பெருக்க முடியும்.

வாடிக்கையாளர்களிடம் நல்ல முறையில் நடந்தால் தான் மீண்டும் அவர்கள் உங்கள் கடைக்கு வருவார்கள் . ஒரு வேலை உங்கள் ஊழியர்கள் வாடிக்கையாளர்களை சரிவர கவனிக்கவில்லை என்றால் அவர்கள் மீண்டும் உங்கள் கடைக்கு வர யோசிப்பார்கள் . மேலும் பிறரிடம் உங்கள் கடை பற்றி கருத்துக்கள் கூறும் போது மிக குறைவாக கூறுவார்கள். எனவே நல்ல ஊழியர்களை பணியில் அமர்த்துவது மிக முக்கியமான ஒன்று .

Bad Planning :

ஒரு தொழிலில் எப்போதுமே பிளானிங்க் என்பது மிக முக்கியம் குறிப்பிட்ட அட்டவனையில் நாம் எப்படி முன்னேறுகிறொம் என்பது தான் அந்த பிளானிங்கில் நாம் கண்டிப்பாக கவனிக்க வேண்டிய ஒன்று . ஒரு வேலை பிளானிங்க் இல்லாமல் நாம் கடமையே என்று சென்றால் முதலீட்டை இழக்க நேரிடும். குறிப்பிட்ட கால அளவை நாம் செட் செய்து அதன் படி நாம் முன்னேற வேண்டும். இல்லையேனில் நிச்சயம் தோல்வியை சந்திக்க நேரிடும்.

இதுபோன்ற விஷயங்களை ஒரு தொழில் தொடங்குவதற்கு முன் சரிபார்த்து அந்த தவறுகளை செய்யாமல் இருக்க கற்றுக் கொள்ள வேண்டும். இதுபோன்ற தவறுகளை தவிர்ப்பதன் மூலம் நாம் நிச்சயம் வெற்றி பெற முடியும் .

Spread the love
x