வண்டியை நிறுத்தன பாத்து நிறுத்துங்க..! வண்டிக்குள் புகுந்த நல்லபாம்பு..!

1 min read
snake on bike -vidiyarseithigal.com

ஒடிசா மாநிலத்தில் இரு சக்கர வாகனத்தில் உள்ள எஞ்சின் பகுதியில் நல்ல பாம்பு புகுந்துள்ளது.

ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் பகுதியை சேர்ந்தவர் பிமல் குமார். அவர் வழக்கம் போல வேலைக்கு செல்வதற்காக காலையில் வாகனத்தை எடுக்க முற்பட்டுள்ளார். அப்போது வாகனத்தின் எஞ்சின் பகுதியில் ஏதோ ஒன்று அசைவது போல தெரிந்துள்ளது. உடனடியாக அவர் உற்று கவனித்துள்ளார்.

snake on bike -vidiyarseithigal.com

அப்போது எஞ்சின் பகுதியில் பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக பாம்புகள் ஆர்வலர்களை தொடர்பு கொண்டுள்ளார் பிமல் குமார். அங்கு வந்த அவர்கள் சுமார் அரை மணி போராட்டத்திற்கு பிறகு பாம்பை வெளியே எடுத்துள்ளனர்.

எஞ்சின் பகுதியில் இருந்து பாம்பை எடுத்த பிறகு தான் அது 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பு தெரியவந்துள்ளது. இது போன்ற மழை காலங்களில் வாகனங்களை எடுக்கும் முன் சரி பார்த்து எடுப்பது சிறந்தது.

Spread the love
x