Best skill development ideas in Tamil ..!

1 min read

skill development ideas

நன்றாக படித்து நல்ல வேலையில் சேரவோ அல்லது சுய தொழில் செய்வதோ தான் பலரின் எண்ணமாக உள்ளது. பெரும்பாலான மக்கள் படித்து வேலையில் இருந்தாலுல் தங்கள் திறன்களை மேம்படுத்த எண்ணி வருகின்றனர். ஆனால் எது போன்று திறன்களை வளர்த்துக் கொண்டால் நமக்கு பலன் அளிக்கும் என பலர் குழப்பத்தில் உள்ளனர்.

அதுபோன்று குழப்பத்தில் உள்ளவர்களுக்காகவே குறிப்பிட்ட சில எப்போதுமே நமக்கு கூடுதலாக லாபம் ஈட்டும் துறைகளில் திறன் வளர்ப்பது குறித்து இதில் பகிரபட்டுள்ளது. முதலில் நாம் காண இருப்பது.

Google Ads/ Fb ads :

Ads அட்வைடைஸ்மன்ட் அல்லது விளம்பரங்கள் இதன் மூலம் நாம் எப்படி சம்பாரிப்பது. இதில் திறன் வளர்த்துக் கொள்வதால் நமக்கு என்ன லாபம் என எண்ணுகிறீர்களா? பொதுவாக ஒரு யூடியுப் வீடியோ அல்லது கூகுளில் ஒரு பக்கத்தினை தேடும் போது பல விளம்பரங்களை நாம் பார்த்திருப்போம் . ஒரு சிலருக்கு அந்த விளம்பரங்களை எவ்வாறு வரவைப்பது என தெரியும்.

ஆனால் பெரும்பாலனவர்களுக்கு அது தெரியாது அப்படியே தெரிந்தாலும் அதில் உள்ள யுக்திகள் தெரியாது. இது குறித்து பல ஆன்லைன் வகுப்புகள் எடுக்கபட்டு வருகிறது. அதனை நீங்கள் கற்றுக் கொண்டால் பிற் காலத்தில் சுயமாக ஒரு மார்க்கெட்டிங்க் நிறுவனம் தொடங்கும் அளவுக்கு வாய்ப்புகள் உண்டு. இது போன்ற திறன்களில் உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வது பெரிதும் உதவும் .

money saving tips:பணம் சேமிக்க சிறந்த வழிகள்! Easy tips கண்டிப்பாக உதவும்

Photography:

அனைவருக்குமே நன்றாக தெரிந்த ஒன்று தான் இது. எளிதாக அனைவராலும் கற்றுக் கொள்ளவும் முடியும். இதனால் என்ன பெரிதாக வருவாய் ஈட்ட முடியும் என நினைக்காதீர்கள் . குறுகிய காலத்தில் நல்ல வருமானம் உங்களது மீது நேரங்களில் ஈட்ட முடியும். தனிப்பட்ட நிகழ்ச்சிகள், சின்ன சின்ன விழாக்கள் என நீங்கள் செய்தாலே நல்ல வருவாய் ஈட்டலாம் .

part time business ideas tamil (2)

skill development ideas

எனக்கு போட்டோகிராபி தெரியாது என்றால் எளிதாக் நீங்கள் கற்றுக் கொள்ளவும் முடியும். உங்களது வேலை இல்லாத நேரத்தில் உங்களுக்கு தெரிந்த போட்டோகிராபரிடம் எளிதாக கற்றுக் கொள்ளலாம். அதன் பின் நீங்கள் தனிப்பட்ட முறையில் வருவாய் ஈட்டவும் தொடங்கலாம் .

Yoga Education:

இது என்ன யோகாவை கற்றுக் கொண்டால் தனிப்பட்ட திறன்களில் வருகிறதா? ஆமாம் இன்றைய நவீன உலகிம் பெரும் பகுதி மக்கள் உடலினை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள விரும்புகின்றனர். பலர் உடற்பயிற்சி கூடங்களுக்கும், பலர் யோகா போன்ற பயிற்சிகளும் மேற்கொள்கின்றனர். எப்படி உடற்பயிற்சி கூடங்களில் டிரைனர் இருக்கின்றனரோ அதுபோல தான் யோகா ஆசிரியர்கள் இருக்கின்றனர். எனவே நீங்கள் தனிப்பட்ட முறையில் யோகாவை உங்களது திறன் ஒன்றாக சேர்த்துக் கொண்டால் நீங்களும் பிறருக்கு கற்றுக் கொடுத்து அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட வருவாய் சம்பாரிக்க முடியும் . மேற்கொண்டு உங்களது ஆரோக்கியத்தையும் உங்களால் நன்றாக் பார்த்துக் கொள்ள முடியும் .

Video Editing :

பெயரினை கேட்டால் தான் கற்றுக் கொள்ள மிக கடினமாக இருக்கும் என தோன்றும் ஆனால் கற்றுக் கொள்ள மிகவும் எளிதானது. குறைந்தபட்சம் ஒரு நல்ல லேப்டாப் அல்லது கணினி இருக்க வேண்டும் . மேலும் கற்றுக் கொள்ள தேவையான சாப்ட்வேர்கள் இருக்க வேண்டும்.

இதனை கற்றால் அப்படி எனக்கு பெரிதாக உதவும் என நினைப்பீர்கள் .ஆன்லைனில் பல பார்ட் டைம் வேலை வழங்கும் நிறுவனங்கள் ஒரு எடிட்டரை தேடி கொண்டே இருக்கின்றனர். அது மட்டுமின்றி நீங்கள் ஒரு பிகினர் அதாவது ஆரம்பகட்ட நிலையிலேயே நல்ல வருவாய் ஈட்டலாம் நன்றாக கற்றுக் கொண்டால் அதன் பின் எக்ஸ்பெர்ட் லெவலுக்கு நீங்கள் தேர்ந்துவிட்டால் இதனையே உங்கள் நிரந்தர வேலையாக கூட மாற்றலாம்.

இதுபோன்ற திறன்களை நாம் வளர்த்துக் கொண்டால் இப்போது மட்டுமல்லாமல் எப்போதுமே ஒரு நிரந்தர வருவாய் நம்மால் ஈட்ட முடியும் என பலர் கூறுகின்றனர். கூடுதலாக ஏதெனும் ஒன்றினை கற்றுக் கொள்ள வேண்டும் . ஆனால் என்ன என்பது குறித்து ஐடியா இல்லாதவர்களுக்கு இது பெரிதும் உதவும் .

Spread the love
x