sirumalai பற்றிய சுவாரசிய தகவல்கள்…! அறியப்படாத ஊட்டி..!
1 min readsirumalai
தமிழகத்தில் சுற்றுலா தளம் என்றாலே உடனடியாக ஞாபகத்துக்கு வருவது ஊட்டி, கொடைக்கானல் தான். ஆனால் பலருக்கு தெரியாத ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்த பல சுற்றுலா தலங்கள் தமிழகத்தில் உள்ளன. அவற்றில் ஒன்று தான் சிறுமலை.
மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு மத்தியில் இந்த சிறுமலை அமைத்துள்ளது. மதுரையில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவிலும் , திண்டுக்கல்லில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. கடுமையான வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க சிறந்த இடமாக இந்த இடம் உள்ளது.
சிறுமலை :
பெரும்பாலான மக்களால் அறியப்படாத ஒரு கோடைவாச தலம். எங்கு பார்த்தாலும் மூலிகை மரங்கள் , செடிகள் என இயற்கை வாசம் வீசும் இடமாக உள்ளது. காட்டெருமை, கரடி விலங்குகள் இப்பகுதியில் அதிகமாக காணப்படுகின்றன. மொத்தமாக 18 ஹைர்பின் பெண்டுகள் உள்ளன. அதிக போக்குவரத்து நெரிசல் இல்லாத மலைப்பாதை என்பதால் இயற்கையை ரசித்தபடி செல்ல நல்ல வாய்ப்பாக உள்ளது.
சுற்றி பார்க்க சிறந்த இடங்களாக இருப்பது போட் ஹவுஸ் , தோட்ட பகுதிகள் தான். அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது வாழை தான். அதிலும் சிறுமலை வாழைப்பழம் மிகவும் விரும்பி சாப்பிட உகந்ததாக உள்ளது.
இங்குள்ள சஞ்சிவினி மலை ராமயணத்தில் அனுமன் தூக்கி சென்ற சஞ்சிவினி மலையில் இருந்து ஒரு துண்டு விழுந்து அதுவே இங்குள்ளதாக கருதப்படுகிறது.
வெள்ளிமலை( sirumalai) :
சிறுமலையில் உள்ள ஒரு மலைபகுதி இதுவாகும். ஒரு காலத்தில் வெள்ளியாக இந்த மலை இருந்ததாகவும் கலியுகத்தில் எங்கு திருடப்பட்டு விடுமோ என அஞ்சி இதனை அகஸ்த்தியர் பாறையாக மாற்றிவிட்டதாக அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.
மேலும் அங்குள்ள சிறுமலை நீர்த்தேக்கத்தில் மக்களுக்கு படகு சவாரி அனுமதிக்கபடுகின்றனர். 2010ம் ஆண்டு இந்த நீர்த்தேக்கத்தை செயற்கையாக உருவாக்கி உள்ளனர். வார இறுதியில் மக்கள் வரும்போது இதில் படகு சவாரிக்கு அனுமதிக்கபடுகின்றனர்.
அடுத்ததாக உயர் கோபுரம் ஒன்று அப்பகுதியில் அமைத்துள்ளது. மலையில் ஏறும் போது 17வது கொண்டை ஊசி வளைவில் இந்த இடம் அமைந்துள்ளது. அந்த கோபுரத்தின் உச்சியில் நின்று பார்த்தால் அற்புதமான இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கலாம். மேலும் திண்டுக்கல் நகர் பகுதி மற்றும் சிறுமலையின் மற்ற மலைத்தொடர்களை இப்பகுதியில் நின்று காணலாம் .
ஏன் சிறுமலை:
ஊட்டி , கொடைக்கானல் போன்ற இடங்களை பார்த்தவர்களுக்கு மீண்டும் அங்கு செல்ல வேண்டாம். மாற்றாக வேறு ஒரு மலைப்பகுதிக்கு செல்ல வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஏற்ற இடமாக இந்த சிறுமலை உள்ளது. அதிக பட்ஜெட் இல்லாமல் குறைவான பட்ஜெட்டில் நிறைவான மகிழ்ச்சி அளிக்கும் இடமாக இவ்விடம் உள்ளது. இயற்கை அழகில் அதிக மக்கள் கூட்டம் இன்றி ரம்மியமாக பொழுதை கழிக்க ஏற்ற இடம் இந்த சிறுமலை.
சிறுமலை செல்பவர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்றி தங்குமிடம் முன் ஏற்பாடு தான். அங்கு சென்று தங்குமிடம் ஏற்பாடு செய்வது மிகவும் கடினம் எனவே முன் கூட்டியே தங்குமிடத்தை தேர்வு செய்து கொள்வது நல்லது.