Shruthihassan காதலர் இவரா..! வைரலாகும் புகைப்படம்..!

1 min read

தமிழ் மட்டும் அல்லாமல் தெலுங்கு, ஹந்தி போன்ற மொழிகளில் மிகவும் பிரபலமான நடிகை ஸ்ருதிஹாசன். நடிகர் கமலஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் நடிப்பு மட்டுமின்றி பாடல், இசை என பல திறமைகளை கொண்டவர் ஆவார்.

ஏழாம் அறிவு படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். இதனையடுத்து 3, பூஜை, புலி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்நிலையில் சலார் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

shruthihasan -vidiyarseithigal.com

இவர் தற்போது மும்பையை சேர்ந்த டூடுல் கலைஞரான சாந்தனு ஹசரிகா என்பவரை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் மும்பையில் ஒன்றாக தீபாவளி கொண்டாடி உள்ளனர். தற்போது அந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உள்ளனர். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.   

Spread the love
x