tamil online news: ஒரே ஒரு மாணவருக்காக பள்ளியை திறந்து பாடம் நடத்தும் ஆசிரியர்கள்..! குவியும் பாராட்டுகள்..!

1 min read
tamil online news-vidiyarseithigal.com

tamil online news

தமிழகத்தில் கடந்த 300 நாட்களாக கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. பள்ளிகள் மூடப்பட்டு இருந்தாலும் மாணவர்களின் கல்வி பாதிக்கபடாத வகையில் ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் 10ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கபட்டு உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கபட்டு வருகின்றன. இதனிடையே நெல்லை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகள் மொத்தம் 313 பள்ளிகள் திறக்கபட்டன.

அம்பை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மாஞ்சோலை எஸ்டேட் அமைந்துள்ளது. அங்குள்ள தோட்டத்தில் சுமார் 1000த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அங்குள்ள தொழிலாளர்களின் குழந்தைகள் படிப்பிற்காக அரசு உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது.

மேலும் செய்திகளுக்கு கிளிக் செய்யவும் 

இந்த பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ளது. மொத்தம் 15 மாணவ – மாணவிகள் இந்த பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் 10ம் வகுப்பில் ஒரு மாணவர் மட்டும் படித்து வருகிறார். இந்த பள்ளிக்கு கோமதி என்பவர் தலைமை ஆசிரியராக உள்ளார். அவருடன் 5 ஆசிரிய , ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர்.

நேற்று முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க உத்தரவிட்டதால் அங்கு பயிலும் ஒரே ஒரு மாணவருக்காக அந்த பள்ளி திறக்கபட்டது. குறிப்பிட்ட நேரத்தில் பேருந்து வசதி இல்லாத காரணத்தினால் ஆசிரியர்கள் மோட்டர் சைக்கிளில் பள்ளிக்கு வந்துள்ளனர்.

tamil online news-vidiyarseithigal.com

tamil online news

இது குறித்து அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் கூறுகையில், மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக இந்த பள்ளி செயல்பட்டு வருகிறது. எனவே இங்கு குறைந்த அளவிலான மாணவ- மாணவிகளே பயின்று வருகின்றனர். ஒரு மாணவன் மட்டுமே 10ம் வகுப்பில் பயின்று வருகிறார்.

ஒரே ஒரு மாணவர் தான் படித்தாலும் கல்வி முக்கியம் என்பதற்காக பள்ளியை திறந்துள்ளோம் என கூறியுள்ளனர். ஆசிரியர்களின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.   

Spread the love
x