savings for kids tamil: பெண் குழந்தைகளுக்கான சிறந்த சேமிப்பு திட்டங்கள்…!
1 min readsavings for kids tamil
இந்தியாவில் குழந்தைகள் பிறந்தாலே அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பல சேமிப்பு திட்டங்கள் மூலம் பெற்றோர்கள் சேமிக்க தொடங்கி விடுகின்றனர். குறிப்பாக பெண் குழந்தைகள் என்றால் இன்னும் கூடுதலாக பல சேமிப்புகள் மூலம கூடுதல் கவனம் செலுத்தி சேமிக்க தொடங்கி விடுகின்றனர்.
இந்தியாவில் சில சம்பிரதாயங்கள் இன்னும் பல இடங்களில் பின்பற்று வருகின்றனர். பலர் அவற்றை மாற்ற நினைத்தாலும் சிலர் பாரம்பரியம் தொடர வேண்டும் என்பதற்காக இன்னும் வரதட்சனை போன்ற செயல்களை செய்து கொண்டு தான் உள்ளனர். அதற்காகவே பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர்கள் கூடுதலாக சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டி உள்ளது.
மேலும் குழந்தைகளில் படிப்பு போன்ற செலவுகளுக்கும் இந்த சேமிப்புகள் மிகவும் உதவிகரமாக உள்ளன. பெண் குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து உள்ளது. அதில் உள்ள ஒரு சில திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.
சுகன்யா சம்ரிதி யோஜனா; (savings for kids tamil)
கடந்த 2015ம் ஆண்டு இந்த திட்டம் தொடங்கபட்டது. குழந்தை பிறந்தது முதல் 10 வயது வரை இந்த திட்டத்தில் இணையலாம். குழந்தையில் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் யாராக இருந்தாலும் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி வர வேண்டும். 15 ஆண்டுகள் வரை செலுத்தி வந்தால் அந்த தொகை 15 ஆண்டுகள் முடிவில் இரட்டிப்பு ஆகும்.
இந்தத் திட்டத்தில் முதல் முதலீட்டுத் தொகையாக 250 ரூபாயை செலுத்த வேண்டும். ஒவ்வொரு மாதமும் 150 ரூபாயின் மல்டிப்பிள்ஸ் ஆக, ஒரு ஆண்டுக்கு அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். உதாரணமாக, நீங்கள் ஒரு ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்தால், 15 ஆண்டுகளுக்குப் பிறகு 7.60 சதவிகித வட்டி அடிப்படையில் 43.50 லட்ச ரூபாய் கிடைக்கும்.
கன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யப்படும் தொகைக்கு வருமான வரி விலக்கு பெறலாம். நீங்கள் முதலீடு செய்யும் பணம், அதில் பெரும் வட்டி மற்றும் முதிர்வடைந்த தொகை ஆகிய மூன்று தொகைகளுக்குமே வருமான வரி விலக்கு உண்டு. 10 வயதுக்குள் இதில் பணம் செலுத்த தொடங்கினால் பெண்ணின் 20வது வயதுகளில் ஒரு கணிசமான தொகை கிடைக்கும்.
அதனை கொண்டு உயர்கல்வி படிக்க அல்லது வேறு அவர்களுக்கு தேவையான செலவுகளை செய்ய மிகவும் உதவிகரமாக இருக்கும்.
savings for kids tamil
பாலிகி சம்ரிதி யோஜனா: (savings for kids tamil)
பொருளாதாரத்தில் பின் தங்கி உள்ள பெண் குழந்தைகளுக்காக மத்திய அரசால் உருவாக்கபட்ட திட்டம் இது. பள்ளியில் பெண் குழந்தைகளின் கல்வி தடைபடாமல் இருப்பதை இந்த திட்டம் உறுதி செய்கிறது. 1997 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் நோக்கம் பெண் குழந்தைகளை குடும்பத்தில் வரவேற்பது மற்றும் பெண் குழந்தைகளை எதிர்மறையாகப் பார்ப்பதை நிறுத்துவதாகும்.
best tomato alternates tamil:தக்காளிக்கு பதிலா இத ட்ரை பண்ணுங்க..!
திட்டத்தில் பதிவு செய்திருக்கும் குழந்தைகளுக்கு பள்ளி படிப்போடு மாதாந்திர ஸ்காலர்ஷிப்களையும் வழங்குகிறது. அதுமட்டுமின்றி வருமானம் ஈட்ட உதவும் பல்வேறு வேலைகளையும் கற்றுக்கொடுத்து பொருளாதார சுதந்திரத்தை பெறுவது போன்ற உதவிகளையும் இந்த திட்டம் வழங்குகிறது.
பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பெண் குழந்தைகளின் கல்விக்கு இந்த திட்டம் பெரும் உதவியாக உள்ளது. பெண் உரிமைகளை பாதுக்காக்க மற்றும் அவர்களுக்கு உயர்கல்வி கிடைப்பதை இந்த திட்டம் உறுதி செய்கிறது.
Ladli திட்டம்
இந்த திட்டம் ஹரியான மாநில அரசால், பெண்கள் மற்றும் குழந்தை நல மேப்பாட்டு அமைச்சகத்தின் கீழ் தொடங்கப்பட்டது. ஹரியான மாநிலம், ஆண்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் மாநிலம் மற்றும் பெண் குழந்தைகள் பிறந்தாலே கெட்ட சகுனமாக நினைக்கும் பல பகுதிகள் உள்ளன. எனவே, இதை மாற்றுவதற்கு மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது