Realme gt series …! குறைந்த பட்ஜெட்டில் மாஸான போன்..!

1 min read
realme gt series-vidiyarseithigal.com

realme gt series

Smartphone நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவரவே பிரத்யேக போன்களை அவ்வபோது சந்தைகளில் வெளிகொண்டுவருகின்றன. முன்பு வந்த ரகங்களை காட்டிலும் அடுத்து வரும்  ஸ்மார்ட்போன்களில் சிறந்த  ப்ரொசெசர் , ரேம் என பல மேம்பாட்டுகளுடன் வருகின்றன.

இந்தியாவில் குறுகிய காலகட்டத்தில் பலரால் விரும்ப பட்ட ஸ்மார்போனாக ரியல்மீ உள்ளது. ஆனால் இன்றைய நிலையில் இந்திய ஒரு முன்னனி நிறுவனமாக ரீயல்மீ நிறுவனம் முத்திரையை பதித்துள்ளது. பல தரப்பினரும் விரும்பும் வகையில் தனது ஸ்மார்போன்களை ரியல்மீ வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் ரியல்மீ அடுத்த வெளியிட போகும் ஸ்மார்ட்போனுக்கு realme gt என பெயரிட்டுள்ளது. உலக சந்தையில் சில நாட்களுக்கு முன் இந்த realme gt series ஸ்மார்ட்போன் வெளிவந்த நிலையில் இந்திய சந்தையில் ஆகஸ்ட் 18 அன்று வெளிவரும் தெரிவிக்கபட்டுள்ளது. பலரும் எதிர்பார்த்த ஒரு ஸ்மார்ட்போனாக இந்த போன் உள்ளது.

மூன்று மாடல்களை கொண்டதாக இந்த realme gt series மாடல் வெளிவர உள்ளது. Realme Gt, Realme gt Master, Realme explorer edidtion என வெளிவர உள்ளது.

Realme GT:

Realme GT இந்த மாடலில் 6.43 இன்ச் புல் ஹச்டி உடன் 120 ஹெட்ஸ் Refresh rate உடன் வெளிவர உள்ளது. பல முன்னனி விலை உயர்ந்த போன்களில் Snapdragon 888 பிராஸசர் இந்த இடம் பெறுவது முக்கிய அம்சமாக பார்க்கபடுகிறது. மேலும் 4500 mah பேட்டரி திறன் கொண்டதாக இந்த போன் வடிவமைக்கபட்டுள்ளது. இத்துடன் 65 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்க் திறன் கொண்ட சார்ஜரும் வழங்கப்பட உள்ளது. இந்த மாடல் இரண்டு வெரியன்ட்களில் வரும் என கூறப்படுகிறது. 8ஜிபி மற்றும் 128 ஜிபி. மற்றொரு மாடலாக 12ஜிபி மற்றும் 256 ஜிபி வரும் என கூறப்படுகிறது. இதில் உள்ள Front camera 16எம்பி ஆகவும் , Rear camera 64+8+2 ஆகிய எம்.பி கொண்டதாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

Realme GT master :

அதிகம் எதிர்பார்க்க பட்ட மாடலாக இது உள்ளது காரணம் இதன் பின் புறத்தில் கொடுக்கபட்டுள்ளது சூட்கேஸ் டிசைன் லெதர் கொண்ட பின் பகுதி ஆகும் . இதுவரை யாரும் கொண்டு வராத டிசைனாக இருக்கும் என அந்நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதிலும் 6.43இன்ச் கொண்ட புல் ஹெஸ்டி டிஸ்பிளே மற்றும் 120 ஹெட்ஸ் Refresh rate உள்ளது என தெரிவிக்கபட்டுள்ளது.

ஆனால் முந்தைய மாடலில் உள்ளது போல 888 பிராஸசர் இதில் அதற்கு பதிலாக snapdragon 778 பிராசஸர் இதில் உள்ளது. பேட்டரி திறன் 4500 ஆகும் அதனை சார்ஜ் செய்ய 65 வாட் ஃபாஸ்ட் சார்ஜர் வழங்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது. இதிலும் 8 மற்றும் 128 ஜிபி , 8 மற்றும் 256 ஜிபி என இரு வேரியண்ட்கள் வர உள்ளன. இதில் 32 எம்பி Front camera மற்றும் 64+8+2 mp rear camera உள்ளது என தெரிவிக்கபட்டுள்ளது.

Realme gt explorer edition :

இதனை பற்றிய பெரும்பாலான தகவல்கள் வெளிவராமலேயே உள்ளது. மற்ற வேரியண்டகள் போலவே இதிலும் புதுமையான ஒன்று நிச்சயம் இருக்கும் என ஸ்மார்ட்போன் பிரியர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Spread the love
x