pregnancy tips tamil: Best Preganancy Tips for Working Woman..!

1 min read
pregnancy tips tamil-vidiyarseithigal.com

pregnancy tips tamil

ஆண்களுக்கு இணையாக பெண்கள் தற்போது வேலைக்கு சென்று வருகின்றனர். மேலும் சில இடங்களில் ஆண்களை காட்டிலும் பெண்கள் நல்ல உயர்ந்த பதவிகளில் இருந்து வருகின்றனர். தரையிலும் சரி விண்ணிலும் சரி பெண்கள் கொடிகட்டி பறக்கின்றனர். இருப்பினும் சில நேரங்களில் பெண்களால் சமாளிக்க முடியாது சூழ்நிலைகள் உருவாகின்றன. அதில் ஒன்று தான் வேலை நாட்களில் கர்ப்பமாக இருப்பது.

மிகவும் பாதுகாப்பாக இருக்கவும் அதே சமயத்தில் வேலையில் கவனம் செலுத்துவது என பல வேலைகளை பெண்கள் ஒரே நேரத்தில் செய்து அசத்தி வருகின்றனர். இருப்பினும் சில கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய இடங்களும் உண்டு. உதாரணமாக அதிக வேலை பளூ, அதிக தூக்கமின்மை ஆகியவை உடலுக்கும் குழந்தைக்கும் சரியான ஒன்றாக இருக்காது.

கர்ப்பாக இருக்கும் பெண்கள் வேலை நேரத்தில் கடைபிடிக்க வேண்டிய சில முக்கிய குறிப்புகள் குறித்து இந்த பதிவில் காணலாம் (pregnancy tips tamil).

what are the best pregnancy tips tamil for working woman?

உணவுகள்: (pregnancy tips tamil)

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் பொதுவாக முதலில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளில் ஒன்று நன்றாக சாப்பிட வேண்டியது. அதிலும் உடலுக்கு ஏற்ற உணவுகளை தேர்வு செய்து எடுத்து கொள்ள வேண்டும் என நிபுணர்கள் கூறுகிண்றனர். இந்நிலையில் கர்ப்பமாக இருந்து கொண்டு பணிபுரியும் பெண்கள் உணவில் கூடுதல் கவனம் எடுத்து கொள்ள வேண்டும். வேலை பளூ அதிகம் உள்ளது என்பதற்காக உணவுகளை தவிர்ப்பதோ அல்லது நேரத்தை மாற்றி உணவு எடுத்து கொள்வது நல்லது அல்ல.

எனவே ஊட்டச்சத்துள்ள காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை துண்டு துண்டாக அரிந்து சாலட் போன்று சாப்பிடலாம். மேலும் தயிர், வெல்லம் ஆகியவற்றையும் இதில் சேர்த்து கொள்ளலாம். புரதம் நிறைந்த பருப்பு வகைகள், முளைப்பயிர்கள், பால், முட்டை ஆகிய உணவுகளையும் எடுத்து கொள்ளலாம். ஒமேகா 3, ஃபோலிக் அமிலம் ஆகிய மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரைப்படி சாப்பிடலாம். இவ்வாறு செய்து வந்தால் பணிபுரியும் கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமாக இருக்க முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

easy pregnancy tips in tamil:வேகமாக கருதரிக்க எளிய வழிமுறைகள்..!

தூக்கம் : (pregnancy tips tamil)

சாதாரணமாகவே மனிதர்களுக்கு தூக்கம் என்பது முக்கியமான ஒன்று என கூறலாம். தூக்கம் கெட்டாலே உடலில் பாதி நோய்களுக்கு வழி வகை செய்வது போல ஆகிவிடும். அப்படி இருக்கும் போது கர்ப்பிணி பெண்களுக்கு தூக்கம் கெடுவது குழந்தைக்கும் மிகவும் தொந்தரவு தரும் ஒன்றாக இருக்கும். இதனிடையே வேலைக்கு செல்லும் கர்ப்பிணி பெண்களுக்கு தூக்கம் கெட்டால் மிகவும் கடினமாக இருக்கும்.

வேலை பளூ மற்றும் வேலை குறித்த சிந்தனைகளால் தூக்கம் என்பது கடினமான ஒன்று தான். ஆனால் அவற்றை தாண்டி தூங்கி தான் ஆக வேண்டும் என்பது முக்கியமான ஒன்று. குழந்தையின் வளர்ச்சிக்கும், கர்ப்பிணி பெண்களின் உடல் வலிக்கும் சிறந்த தீர்வு தூக்கம் தான். எனவே எக்காரணம் கொண்டும் தூக்கத்தை தவிர்க்காதீர்கள்.

பொதுவாக கர்ப்ப காலத்தில் சரியாக தூங்கவில்லை என்றால் அதிக மன அழுத்தம், ஆரம்ப நிலை சர்க்கரை நோய், குறை மாதத்தில் குழந்தை பிறத்தல், கரு வளர்ச்சி பாதிக்கப்படுதல் போன்ற பல பாதிப்புகள் உண்டாகும். ஆதலால் 7 முதல் 9 மணி நேரம் கர்ப்பிணி பெண்கள் அவசியம் தூங்க வேண்டும் என்று மகப்பேறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

green tea benefits in tamil: கீரின் டீ உடல் எடையை குறைக்குமா?

ஆடைகள்: (pregnancy tips tamil)

மற்ற நேரங்களில் நாம் எப்படி வேண்டுமானாலும் ஆடை அணிந்து கொள்ளலாம். ஆனால் கர்ப்ப காலத்தில் நல்ல சௌகர்யமான ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். நாம் அணியும் ஆடை நமக்கு மட்டும் அல்லாமல் நமது குழந்தைகான ஒன்று என அறிந்து அணிய வேண்டும். குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்கள் நீண்ட வேலையில் ஈடுபட வேண்டும் என்பதால் அதற்கேற்ப ஆடைகள் அணிய வேண்டும்.

கர்ப்ப காலத்தில் அலுவலகம் செல்லும்போது இறுக்கமான ஆடைகளை அணிய வேண்டாம். இதனால் உங்களுக்கு அசௌகரியமான உணர்வு உண்டாகும். மேலும் மூச்சு முட்டுவது போன்ற உணர்வும் ஏற்படும். அதே போன்ற தரமான காட்டனினால் உருவான துணிகளை அணிவது நல்லது. மேலும் ஹீல்ஸ் போன்ற காலணிகள் அணிவதை தவிர்க்க வேண்டும்.

நாற்காலி: (pregnancy tips tamil)

என்ன வெறும் நாற்காலி என உள்ளது என யோசிக்கீறிர்களா. ஆம் கர்ப்ப காலத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள் அவர்கள் அமரும் நாற்காலி குறித்தும் கவனத்தில் கொள்ள வேண்டும். நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்ய போகீறிர்கள் எனவே அதற்கேற்ப நாற்காலியை பயன்படுத்த வேண்டும். அப்போது தான் உடலுக்கு வலி இல்லாமல் இருக்கும்.

அலுவலக பணிசெய்யும் கர்ப்பிணி பெண்கள் தங்களுக்கு வசதியான வகையில் நாற்காலியில் உட்கார வேண்டும். முதுகு வலி, கழுத்து வலி போன்றவற்றை தவிர்க்க சின்ன தலையணையை பயன்படுத்தலாம். மேலும் ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்வதை தவிர்க்க வேண்டும். அவ்வப்போது இடைவேளை எடுத்து கொண்டு நிதானமாக வேலை செய்யுங்கள். மேலும், நல்ல வெளிச்சம் உள்ள இடத்தில் அமர்ந்து வேலை செய்வது கண் பார்வைக்கு நல்லது.

உடற்பயிற்சிகள் : (pregnancy tips tamil)

உடற்பயிற்சி என்பது அனைவருக்குமே சிறந்த ஒன்று. உடலினை நன்றாக வைத்து கொள்ளவும், மனதினை ஆரோக்கியமாக வைத்துகொள்ள என உடற்பயிற்சி தேவைப்படுகிறது. இந்நிலையில் பணிபுரியும் கர்ப்பிணி பெண்கள் பொதுவாக அலுவலக வேலை செய்யும் கர்ப்பிணி பெண்கள் தொடர்ச்சியாக வேலை செய்யும்படி நேரலாம். இருப்பினும் வேலை நேரங்களில் தேவையான இடைவேளையை எடுத்து கொள்ளுங்கள். இப்படி செய்வதால் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். மேலும் முதுகு வலி, இடுப்பு வலி போன்றவை ஏற்படாது. 1 மணி நேரத்துக்கு 5 நிமிடம் இடைவேளை எடுத்து கொள்வது நல்லது. அதே போன்று அவ்வப்போது உங்கள் கால்களை நீட்டி மடக்குங்கள். மன அழுத்தமாக தோன்றினால் 2-5 நிமிடம் கண்களை மூடி நிதானப்படுத்தி கொள்ளுங்கள்.

Spread the love
x