post office savings scheme in tamil..!
1 min readpost office savings scheme in tamil:
post office savings scheme in tamil : தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் மக்களிடையே நல்ல வரவேறப்பை பெற்று வருகின்றன. வங்கிகளில் மக்கள் சேமிப்பு கணக்கு தொடங்கியது போல தபால் நிலையங்களிலும் தொடங்கி வருகின்றனர். முன்பு எப்போதும் இல்லாத அளவில் மக்கள் தபால் நிலையங்களை நாட தொடங்கி உள்ளனர்.
வங்கிகளில் வழங்குவது போல தபால் நிலையங்களும் மக்களுக்கு பல்வேறு சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது என்று சொல்லலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்களை தபால் நிலையம் பெற முடியும்.
தற்போது தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கை தொடங்க நடுத்தர மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஏனெனில் பெரும்பாலும் அனைத்து கிராமங்களிலும் தபால் நிலையங்கள் செயல்படுகின்றன.
வங்கிகளை போலவே Post Office இல் தொடங்கும் சேமிப்பு கணக்குகளுக்கு Mobile Baking, Internet Banking, UPI மற்றும் ATM Card போன்ற பல்வேறு சேவைகளை தபால் நிலையங்கள் வழங்குகின்றன. எனவே தபால் சேமிப்பு கணக்குகளில் ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.
Read More : recurring deposit என்றால் என்ன? முழு விவரம்..!
போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு கணக்கு | Post office savings scheme tamil
தபால் நிலையங்களில் தொடங்கப்படும் சேமிப்பு கணக்குகளுக்கு 4% வட்டி வழங்கப்படுகிறது. தனிப்பட்ட கணக்கு அல்லது கூட்டு கணக்கு என இரண்டு வகையான கணக்குகளை தொடங்க முடியும். மேலும் எப்போது வேண்டுமானாலும் அதிலிருந்து நம்மால் பணத்தை எடுத்துக் கொள்ள முடியும்.
குறைந்தபட்சம் ரூ.500 இருந்தாலே ஒருவர் தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கை தொடங்கி விட முடியும். முக்கியமான ஒன்றாக பார்க்கபடுவது ஒருவர் அவரது கணக்கில் இருந்து குறைந்தபட்சம் ரூ.50 வரை எடுத்துக் கொள்ள முடியும்.
தபால் நிலைய தொடர் வைப்பு கணக்கு | Post Office Recurring deposit :
தபால் நிலையங்களில் மாதம்தோறும் செலுத்த கூடிய சேமிப்பு கணக்கு அதாவது Recurring Deposit கணக்கை தொடங்கலாம். அவ்வாறு தொடங்கி அதில் மாதம் குறைந்தபட்சமாக ரூபாய் 100 முதல் அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானலும் செலுத்தலாம்.
இதன் கால அளவு 5 ஆண்டுகளாக உள்ளது. இதில் வருடத்திற்கு 5.8% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. 5 ஆண்டுகள் வரை ஒவ்வொரு மாதமும் பணத்தை செலுத்த வேண்டும். 5 ஆண்டுகள் கழித்து அதற்கான முதிர்வு தொகை வழங்கப்படுகிறது.
இந்த கணக்கை ஒருவராக அல்லது 3 நபர்கள் வரை இணைந்து தொடங்கலாம். ஒருவர் எத்தனை Recurring Deposit கணக்கு வேண்டுமானாலும் தொடங்கலாம்.
5 ஆண்டுகள் நிறைவடையும் முன்னரே கணக்கை மூட நினைத்தால் அதற்கான அபராத தொகையை செலுத்திவிட்டு கணக்கு முடித்துக் கொள்ளலாம். மேலும் இந்த திட்டத்திற்கும் Net Banking/ Mobile Banking போன்ற வசதிகள் உள்ளன.
மாத வருமான திட்டம் | Monthly Income Scheme :
தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் சிறந்த திட்டமாகும் இருப்பது மாத வருமான திட்டம். ஏனென்றால் இந்த திட்டத்தில் தான் மாதம் தோறும் வட்டி வழங்கபடுகிறது.
இந்த Monthly Income scheme திட்டத்தில் 6.6% சதவீதம் ஆண்டு வட்டியாக வழங்கப்படுகிறது. இது ஒரு மாதத்திற்க்கு கணக்கிடப்பட்டு ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும்.
ஒரு தனிநபர் கணக்கில் அதிகபட்சமாக Rs.4.5 லட்சம் வரை Deposit செய்யலாம். Joint Account ஆக இருந்தால் Rs.9 லட்சம் வரை deposit செய்யலாம். இந்த MIS திட்டத்தில் குறைந்தபட்சம் Rs.1000 ரூபாயில் இருந்து தொடங்கலாம்.
ஒரு வருடம் முடிவடைந்த பின் முன் கூட்டியே தேவைப்பட்டால் பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
how to open a post office savings account Tamil ?
டைம் டெபாசி கணக்கு | Time deposit account :
டைம் டெபாசிட் கணக்கு என்றால் ஒரு குறிப்பிட்ட கால அலவிற்கு உங்கள் கணக்கில் பணத்தை விட்டுவிடுவதாகும். உதாரணமாக 2 வருட காலத்திற்கு உங்கள் பணத்தை கணக்கில் விட்டுவிட்டால் அது 2 வருடங்களுக்கு பிறகு முதிர்வு தொகையுடன் உங்களுக்கு கிடைக்கும்.
இந்த வகையான சேமிப்புகளில் குறைந்தபட்சமாக ரூபாய் 1000 டெபாசிட் செய்யலாம். இதற்கான வட்டியானது ஒவ்வொரு காலாண்டிற்கும் கணக்கிடப்படுகிறது. இருப்பினும் வருடத்திற்கு ஒரு முறை தான் வட்டி தொகை செலுத்தப்படும்.
தனிநபர் கணக்கு அல்லது ஜாயிண்ட் கணக்காக திறக்கலாம். இது போன்று எத்தனை கணக்குகள் வேண்டுமானாலும் திறக்கலாம். 1, 2, 3 மற்றும் 5 வருடங்கள் இவற்றில் ஏதாவது ஒரு காலத்தை தேர்வு செய்யலாம்.
நீங்கள் தேர்வு செய்த காலத்திற்கு பிறகு பணம் திரும்ப கொடுக்கப்படும். முதிர்வு தொகையை பெருபவர் தேவைப்பட்டால் மீண்டும் காலத்தை நீட்டித்துக்கொள்ளலாம். 5 வருட காலத்திற்கு டெபாசிட் செய்தால் பிரிவு 80C கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
காலம் (Period) | வட்டி விகிதம் (Interest Rate) |
1 Year | 5.5% |
2 Year | 5.5% |
3 Year | 5.5% |
5 Year | 6.7% |
செல்வமகள் சேமிப்பு திட்டம் | Sukanya Samriddhi Accounts
செல்வமகள் சேமிப்பு திட்டம் என்பது பெண் குழந்தைகளுக்கான மிகசிறந்த சிறு சேமிப்பு திட்டமாகும். பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக தபால் துறை இந்த சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
பிறந்த குழந்தை முதல் 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் பெற்றோர்களோ அல்லது பாதுகாவலரோ திறக்கலாம். ஒரு குழந்தையின் பெயரில் ஒரு கணக்கை மட்டுமே திறக்க முடியும்.
ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு பெண்குழந்தைகளுக்கு மட்டுமே இந்த செல்வமகள் சேமிப்பு கணக்கை திறக்க முடியும். ஒருவேளை ஒரு குடும்பத்தில் இரட்டையர்கள் இருந்தால் அப்பொழுது ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை திறக்கலாம்.
ஒரு நிதியாண்டிற்கு குறைந்தபட்சம் Rs.250 ரூபாயில் இருந்து அதிகபட்சம் Rs.1,50,000 ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இந்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் தொடர்ந்து 15 ஆண்டுகள் முதலீடு செய்யலாம். இதில் முதலீடு செய்யும் பணத்திற்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
இதற்கான வட்டி விகிதம் வருடத்திற்கு 7.6% ஆகும். வட்டியானது கூட்டு வட்டி வீதத்தில் கணக்கிடப்படுகிறது.பெண் குழந்தை 18 வயதை கடந்தவுடன் அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவுடன் பணத்தை திரும்ப பெறலாம்.
ஒருவேளை 5 ஆண்டுகளுக்கு பிறகு கணக்கை முன்னதாகவே Close செய்ய விரும்பினால், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு மூடலாம்.
கிசான் விகாஸ் பத்ரா | Kisan Vikas Patra (KVP )
தபால் துறையில் உள்ள சேமிப்பு திட்டங்களில் கிசான் விகாஸ் பத்ரா ஒரு முக்கியமான திட்டம் ஆகும். இந்த திட்டம் கணிசமான வருவாயை ஈட்டி தருகிறது. இது ஒரு மத்திய அரசின் திட்டம் என்பதால் பாதுகாப்பான மற்றும் லாபகரமான திட்டமாக கருதப்படுகிறது.
கிசான் விகாஸ் பத்திர திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு 6.9% கூட்டு வட்டி வழங்கப்படுகிறது.
இதில் மொத்த தொகையாக மொத்தம் 124 மாதங்கள் (10 வருடங்கள் 4 மாதம்) முதலீடு செய்ய வேண்டும். முதிர்வு காலத்திற்கு பிறகு இரட்டிப்பு தொகையாக கிடைக்கும்.
குறைந்தபட்சம் Rs.1000 ரூபாயில் இருந்து முதலீடு செய்யலாம். இதற்க்கு அதிகபட்ச முதலீடு வரம்பு ஏதும் இல்லை. Single அல்லது Joint Accont ஆக Open செய்யலாம்.
how to drink green tea for weight loss Tamil ?
15 வருட பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் | 15 year Public Provident Fund Account (PPF )
PPF திட்டம் என்பது பொது வருங்கால வைப்பு நிதி திட்டமாகும். இந்த திட்டத்தில் Account யை Open செய்த பிறகு தொடர்ந்து 15 ஆண்டுகள் பணத்தை டெபாசிட் செய்துகொண்டே வர வேண்டும். 15 ஆண்டுகளுக்கு பிறகு பணம் முதிர்ச்சி அடையும். நீங்கள் விரும்பினால் முதிர்ச்சி அடைந்த தொகையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்துக்கொள்ளலாம்.
இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு ஆண்டுக்கு 7.1% வட்டியாக அளிக்கப்படுகிறது. மேலும் இந்த வட்டி கூட்டு வட்டியாக (Compounded Yearly) செலுத்தப்படும்.
இதில் ஒரு நிதியாண்டிற்கு குறைந்தபட்சம் Rs.500 ரூபாயில் இருந்து அதிகபட்சம் Rs.1,50,000 ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இந்த தொகையை தவணையாகவோ (Installments) அல்லது மொத்த தொகையாகவோ (lump-sum) செலுத்தலாம்.
தனி நபர் கணக்காக மட்டுமே இதை Open செய்ய முடியும். ஜாயிண்ட் அக்கௌன்ட் ஆக திறக்க முடியாது.
இதை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் Post Office அல்லது Bank இல் Open செய்யலாம். ஒரு நபர் ஒரு PPF கணக்கை மட்டுமே திறக்க இயலும். இதற்கான வட்டி ஒவ்வொரு நிதியாண்டில் இறுதியில் செலுத்தப்படும். வருமான வரி சட்டத்தின் படி இந்த திட்டத்தின் மூலம் ஈட்டப்படும் வட்டிக்கு வரி விலக்கு உண்டு.
தேசிய சேமிப்பு சான்றிதழ் | National Savings Certificates (NSC)
NSC திட்டம் என்பது ஒரு நிலையான சேமிப்பு திட்டமாகும். ஒரு வங்கியிலோ அல்லது தபால் நிலையத்திலோ தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இது சிறிய மற்றும் நடுத்தர வருவாய் முதலீட்டாளர்களுக்கான சேமிப்பு பத்திர திட்டமாகும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பட்ட பத்திரங்கள் வழங்கப்பட்டன. பிறகு இந்த பத்திரங்கள் டிஜிட்டல் வடிவில் வழங்கப்படுகின்றன. ஒருவர் தன்னுடைய பெயரிலோ அல்லது குழந்தைகளின் பெயரிலோ டிஜிட்டல் பத்திரங்களை வாங்க முடியும்.
இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பணமானது முதிர்ச்சி அடைய 5 ஆண்டுகள் ஆகும். இதில் குறைந்தபட்சம் Rs.1000 ரூபாயில் இருந்து முதலீடு செய்யலாம்.
இதற்க்கு அதிகபட்ச முதலீடு வரம்பு ஏதும் இல்லை. அதாவது நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.இந்த திட்டத்தில் எத்தனை கணக்குகள் வேண்டுமானாலும் திறக்கலாம். வருமான வரி சட்டம் 80C கீழ் வரிவிலக்கு பெறலாம்.
முதலீட்டு பத்திரத்தை சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஒருவரின் பெயரில் இருந்து மற்றொருவரின் பெயருக்கு Transfer செய்துகொள்ளலாம்.
irctc food order online: How to order food in train Tamil..!
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் | Post Office Senior Citizen Savings Scheme (SCSS)
60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியுடையவர் ஆவர். 60 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் இந்த திட்டத்தில் இணைய முடியாது.
இந்த SCSS திட்டத்தில் டெபாசிட் செய்யப்படும் பணத்திற்கு 7.4% வட்டி வழங்கப்படும். இது மற்ற சேமிகப்பு கணக்குகளை காட்டிலும் வட்டி விகிதம் அதிகம் ஆகும்.
Rs.1000 ரூபாயில் இருந்து இந்த திட்டத்தில் டெபாசிட் செய்யலாம். இதில் அதிகபட்சமாக Rs.15 லட்சம் வரைக்கும் டெபாசிட் செய்யலாம். இந்த திட்டத்தின் கீழ் செய்யப்படும் முதலீடு, வருமான வரி சட்டம் 80C கீழ் வரி விலக்கு பெற தகுதியுடையது.
மூத்த குடிமக்கள் கணக்கை தனிநபராகவோ அல்லது துணையுடன் கூட்டாகவோ மட்டுமே திறக்க முடியும்.