tamil cinema seithigal: என்னால் இனி அந்த கேரக்டரில் நடிக்க முடியாது- சீரியலை விட்டு விலகிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை..!

1 min read
tamil cinema seithigal-vidiyarseithigal.com

tamil cinema seithigal

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களில் மக்களிடம் அதிகம் விரும்பி பார்க்கப்படும் சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் ஒன்று. அண்ணன் தம்பி பாசப் பிணைப்பை மையமாக கொண்டு இந்த சீரியல் சென்று கொண்டிருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகா சீரியல் தற்போதுவரை ஆயிரம் எபிசோடிகளை கடந்து நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. இப்பேர்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இதுவரை பல்வேறு நடிகர்கள் மாற்றப்பட்டு விட்டனர். இப்போது மேலும் ஒரு நடிகை மாற்றப்பட இருக்கிறார்.

காதல் மன்னன் நடிகையா இவங்க? அடையாளமே தெரில..!

மூன்றாவது மருமகள் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சாய் காயத்ரி, இனி இவங்க கூட நடிக்க முடியாது என விலகி உள்ளார். மேலும் ஐஸ்வர்யாவாக முன்பு நடித்த விஜே தீபிகா மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது

பாண்டியன் ஸ்டோரின் முக்கிய கதாபாத்திரமான முல்லை கதாபாத்திரத்தில் இதுவரை 3 நடிகைகள் மாற்றப்பட்டுவிட்டனர். அதே போல் ஐஸ்வர்யா கதாப்பாத்திரத்திற்கும் 3 பேர் மாறி இருக்கின்றனர். தற்போது மீண்டும் அவர் மாற்றப்பட இருக்கிறார். சீரியலின் ஆரம்ப கட்டத்தில் ஐஸ்வர்யா கேரக்டரில் நடிகை வைஷாலி நடித்து வந்தார். அவர் விலகிய நிலையில் விஜே தீபிகா நடித்தார். அவரும் விலகிய நிலையில் சாய் காயத்திரி நடித்து வந்தார்.

tamil cinema seithigal-vidiyarseithigal.com

tamil cinema seithigal

பாண்டியன் ஸ்டோர்ஸில் தற்போது ஐஸ்வர்யாவாக நடித்து வரும் சாய் காயத்ரி திடீரென தான் விலகுவதாக இன்ஸ்டாகிராமில் போஸ்ட் ஒன்று இட்டுள்ளார். அதில் ஏன் விலகுகிறேன் என்ற காரணத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளா்.

tamil cinema seithigal-vidiyarseithigal.com

tamil cinema seithigal

கணவருடன் விவகரத்தா? பிக்பாஸ் அர்ச்சனா எடுத்த முடிவு..!

சாய் காயத்திரி தன் பதிவில், நான் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து விலகுகிறேன். காரணம் அந்த கதாப்பாத்திரம் தற்போது எனக்கு ஏற்றதாக இல்லை. இனி சீரியலில் வரும் கதை நகர்வுகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அது எனக்கும் என் வருங்கால பணிக்கும் சரியானதாக இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. எனவே நாள் விலகுகிறேன். இதுவரை எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. மேலும் எனது இந்த முடிவினை மதித்த விஜய் டிவிக்கு நன்றி எனவும் சாய் காயத்ரி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தீபிகா தான் கண்ணனுக்கு சரியான ஜோடி. ஆகையால் பழைய ஐஷுவை மறுபடியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Spread the love
x