poco x3 pro: பட்ஜெட் போன் என்றாலே நாங்க தான் அசத்தும் POCO நிறுவனம்..! வெளியான புது poco x3 pro..!

1 min read
poco x3 pro-vidiyarseithigal.com

poco x3 pro

Poco நிறுவனம் இந்திய சந்தையில் தவிர்க்க முடியாத நிறுவனமாக மாறி வருகிறது. போக்கோ நிறுவனத்தில் சமீபத்தில் வெளியான போக்கோ X3, போக்கோ M3 போன்ற செல்போன்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளன. எனினும் போக்கோவில் இன்றளவில் பலரால் சிறந்த மாடலாக கருதப்படுவது POCO X3.

குறைந்த விலையில் நிறைந்த Specifications கொண்ட மாடலாக போக்கோ எக்ஸ்3 உள்ளது. பொதுவாக ஒரு மாடல் குறிப்பிட்ட வெற்றியை பெற்றால் அதிலிருந்து பல வெரியண்ட் வர தொடங்கும் . இப்போது அப்படியாக தான் போக்கோ X3 pro வெளியாக உள்ளது. உலக சந்தையில் நேற்று இந்த மாடல் வெளியானது.

போக்கோ X3 pro 6.67 இன்ச் lcd display கொண்டதாகவும் snapdragon 860 கொண்டதாகவும் வர உள்ளது. இந்த செக்மென்டடில் வேறு யாரும் வழங்காத விலையில் ஸ்னாப்டிராகன் பிராசஸரை poco வழங்க உள்ளது.

 poco x3 pro Specification:

6.67 இன்ச் LCD display

கார்னிங்க் கொரில்லா கிளாஸ் 6

Snapdragon 860

Android 11 மற்றும் miui 12

கேமிரா 48mp primary , 8mp ultra wide, 2mp depth, 2mp macro, 20mp selfie

5160mah பேட்டரி திறன் கொண்டதாகவும் அதனை சார்ஜ் செய்ய 33வாட் பாஸ்ட் சார்ஜர் வழங்கப்படுகிறது.

தற்போது உள்ள பெரும்பாலான Smartphone களில் Headphone jack வழங்கப்படுவதில்லை. ஆனால் போக்கோ அதனை X3 pro-வில் கொண்டு வருகிறது. மேலும் இதனுடைய ரேம் 6ஜிபி மற்றும் 8ஜிபி வகைகளில் வருகிறது. Storage 128ஜிபி மற்றும் 256ஜிபி வெரியண்ட்களில் இந்திய சந்தையில் வர உள்ளது.

POCO X3 Pro இந்திய சந்தையில் வெளியாகும் போது அதன் விலை ரூ21 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை இருக்கும் என கூறப்படுகிறது. பட்ஜெட் விலையில் சிறந்த processor மற்றும் battery நிறைந்த போனாக poco x3 pro வெளிவர உள்ளது.

Spread the love
x