pf account nominee details:PF அக்கவுண்ட் உள்ளவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு..! வருட இறுதிக்குள்..!
1 min readpf account nominee details
ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களின் ஊதியத்தில் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யபடும் அதுவே pf பணம் என குறிப்பிடபடுகின்றது. அவ்வாறு பிடித்தம் செய்யபடுகின்ற பணம் ஊழியரின் பண ஓய்வு காலத்தில் மொத்தமாகவோ அல்லது மாத மாதம் பென்ஷனாகவோ வழங்கபடுகிறது. அப்படிபட்ட பல நன்மைகளை கொண்ட PF அக்கவுண்டில் சில முக்கிய மாற்றங்கள் வர உள்ளன.
அந்த முக்கிய மாற்றம் என்ன என்று பார்த்தால் ஊழியர்கள் தங்களுடைய PF கணக்கில் நாமினியை சேர்க்க வேண்டும். டிசம்பர் 31, 2021, அதாவது இந்த ஆண்டின் இறுதிக்குள் நாமினி நியமிக்கப்பட வில்லை என்றால் பிஎஃப் (pf account nominee details) கணக்கில் இருந்து பெறப்படும் பென்ஷன் மற்றும் இன்சூரன்ஸ் தொகை எதுவுமே கிடைக்காது.
பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பிஎஃப் தொகை, எதிர்காலத்தின் நிதி தேவைகளுக்கு பாதுகாப்பாக இருப்பதோடு, ஊழியர் பணிபுரியும் காலத்தில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அவருடைய குழந்தை, கணவன்/மனைவி பெற்றோர்கள் ஆகியோருக்கும் உதவியாக இருக்கும். எனவே நாமினேஷன் தகவல்களை பிஎஃப் கணக்கில் அப்டேட் செய்வது அவசியம். ஊழியர் இறந்து போனால் பிஎஃப் கணக்கில் இருந்து பெறக்கூடிய எல்லா நன்மைகளையும் அதாவது இன்சூரன்ஸ் மற்றும் பென்ஷன் உட்பட எல்லா நன்மைகளையும் நாமினியால் தொடர்ந்து பெற முடியும்.
lic policy details in tamil:சிறந்த எல்.ஐ.சி பாலிசி திட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!
உங்கள் PF கணக்கில் நாமினேஷன் தகவல் சேர்க்க வேண்டுமானால், ஆதார் இணைக்கப்பட்ட UAN, ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் ஆகியவை அவசியம். நீங்கள் நியமிக்கும் நாமினியின் ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படம், ஆதார் எண், வங்கிக் கணக்கு எண், IFSC கொடு மற்றும் முகவரி ஆகியவை தகவல்களும் அவசியம்.
EPF நாமினியை ஆன்லைனில் சேர்ப்பது எப்படி? pf account nominee details
அதிகாரப்பூர்வ EPFO இணையதளத்திற்குச் செல்லவும் அல்லது epfindia.gov.in என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
பின்னர் ‘சேவை’ (Service) என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, ‘ஊழியர்களுக்கானது’ (For Employees) விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.
அடுத்த ஸ்டெப்பாக, உறுப்பினருக்கான UAN/ ஆன்லைன் சேவை (OCS/OTP) என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்களுடைய UAN எண் மற்றும் கடவுச்சொல் மூலம் நீங்கள் லாகின் செய்ய வேண்டும். உங்கள் PF கணக்கில் உள்நுழைந்த பிறகு, ‘மேனேஜ் டேப்’ (Manage Tab) என்பதன் கீழ் காணப்படும் ‘இ-நாமினேஷன்’ என்பதைத் தேர்வு செய்யவும்.
தேர்வு செய்த பிறகு, ‘விவரங்களை வழங்கு’ (Provide Details) டேப் உங்கள் திரையில் தோன்றும். அதில் ‘சேமி’ (Save) என்பதைக் கிளிக் செய்யவும்.
குடும்ப அறிவிப்பைப் புதுப்பிக்க என்ற ஆப்ஷனில், ‘ஆம்’ (Yes) என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
அடுத்த ஸ்டெப்பாக ‘குடும்ப விவரங்களைச் சேர்’ (Add Family Details) என்ற ஆப்ஷனைக் கிளிக் செய்யவும். அதில் கோரப்பட்ட தகவலை நிரப்ப வேண்டும். நீங்கள் இதில் ஒன்றுக்கு மேற்பட்ட நாமினிகளைச் சேர்க்கலாம்.
மொத்த பங்கின் தொகையை அறிவிக்க ‘நாமினேஷன் விவரங்கள்’ (Nomination Details) என்பதைக் கிளிக் செய்யவும். பிறகு ‘Save EPF Nomination’ (Save EPF Nomination) என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் OTP மூலம் நீங்கள் உங்கள் நாமினேஷன் சேர்ப்பை உறுதி செய்ய வேண்டும்(pf account nominee details). நீங்கள் OTP ஐ உருவாக்க ‘E-sign’ ஐ கிளிக் மொபைல் எண்ணிற்கு வரும் OTP-ஐ சமர்ப்பிக்க வேண்டும்.