Passive Income Ideas In Tamil..! PASSIVE INCOME என்றால் என்ன?
1 min readPassive Income Ideas In Tamil
பொதுவாக வருவாய் என்றால் பல வகைகளில் உண்டு. நாம் வேலைக்கு சென்று அதன் மூலம் கிடைக்கும் வருவாய் அப்படி இல்லையென்றால் நாம் ஒரு தொழில் தொடங்கி அதன் மூலம் கிடைக்கும் வருவாய் என பல வகைகளில் உண்டு. இப்படி வருவாய் பல வகைகளில் ஈட்டப்படலாம். அதில் ஒரு வகை தான் passive income .
அப்படி என்றால் என்ன என்று தான் யோசிக்கிறீர்கள். அதாவது ஒரு வருவாய் நம்முடைய தலையிடல் அதிகளவில் இல்லாமல் இருக்கும் போது அதில் இருந்து வரும் வருவாய் தான் passive income. உதாரணமாக ஒரு காலத்தில் நீங்கள் விளையாட்டாக ஒரு யூடியுப் வலைத்தளத்தை தொடங்கி இருப்பீர்கள். அதில் இப்போது நீங்கள் எதும் வீடியோக்கள் போடாமல் அந்த சேனல் செயலற்று இருக்கலாம்.
இருப்பினும் அந்த சேனலில் இருந்து உங்களுக்கு ஒரு வருவாய் வந்து கொண்டு இருக்கலாம் . அதுபோன்ற வருவாய்க்களை தான் passive income என கூறுகின்றனர். இதுபோன்று வருவாய்க்களால் நமக்கு பல நன்மைகள் உண்டு . அவை என்ன என்பது குறித்தும் , passive income எப்படி உருவாக்குவது என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
நிரந்தர வருமானம் :
Passive income என்பது நம் உழைப்பு அதிகளவில் இன்றி நமக்கு கிடைக்கும் நிரந்திர வருமானம் ஆகும். இந்த வருமானம் என்பது நமக்கு எப்போதுமே இருக்கும் வகையில் கிடைக்கும் வருமானம் ஆகும் . உதாரணமாக நீங்கள் உங்களுக்கு என ஒரு இடம் வைத்திருப்பீர்கள் அந்த இடத்தில் என்ன செய்வது என தெரியாமல் வாடகைக்கு விட்டு இருப்பீர்கள் . அதுபோல வரும் வருவாய் கூட passive income ஆகும்.
சுதந்திரம் :
எப்போதுமே நமக்கு ஒரு நிரந்திர வருவாய் வருகிறது என்றால் நம் அனைவருக்குமே ஒரு வித மகிழ்ச்சி கிடைக்கும். குறிப்பாக எதிர்காலம் குறித்த கவலை சற்றி குறைந்து சுதந்திரமாக செயல்பட தொடங்கலாம். இதுபோன்ற வருவாய் மூலம் நம்முடைய வேலை பளு குறைந்து சுதந்திரமாக அச்சமின்றி பொழுதை கழிக்க முடியும். மேலும் நம்முடைய பயத்தினை குறைத்து நம்முடைய கோவத்தை குறைக்கவும் இதுபோன்ற வருவாய் நமக்கு பெரிதாக உதவுகிறது.
அதிகளவு ஓய்வு:
இதுபோன்று உங்களுக்கு ஒரு கூடுதல் வருவாய் வரும் பட்சத்தில் அதிகளவு வேலை செய்ய வேண்டிய சூழல் குறைய தொடங்கி விடுகிறது. அதன் காரணமாக உங்கள் வேலையில் இருந்து முன் கூட்டியே உங்களால் ஓய்வு பெற வழி வகை செய்கிறது. ஒருவர் இளம் வயதில் ஓய்வு பெற எண்ணினால் நிச்சயம் அவரின் முதல் குறிக்கோள் எப்படி ஒரு passive income உருவாக்குவது என்பது குறித்து தான் இருக்க வேண்டும்.
Passive Income Ideas In Tamil
வருவாய் விகிதத்தை அதிகரிக்கும் :
நிரந்திர கூடுதல் வருவாய் வரும் பட்சத்தில் உங்களின் செலவுகள் போக நிச்சயம் சேமிப்பு தொகையை அதிகரிக்க உதவுவதாக இருக்கும். எந்த அளவுக்கு கூடுதல் வருவாய் வருகிறதோ அந்த அளவுக்கு உங்களால் பணத்தை கூடுதல் சேமித்து வைக்க முடியும் . எனவே ஒரு passive income என்பது எந்த அளவுக்கு நல்லது என்பது இதுபோன்று நாம் செய்தால் தான் தெரியும்.
இதுபோன்ற வருவாய்க்களை ஈட்ட சில வழிகள் உண்டு .என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
Blog or Youtube :
பிளாக் அல்லது யூடியுப் உருவாக்கி அதில் உங்களுக்கு தெரிந்த விஷயங்களை பகிர்ந்து வருவது மூலம் நீங்கள் ஒரு நிரந்திர passive income பெற முடியும். நீங்கள் இன்று உங்கள் பிளாக் அல்லது யூடியுப்பில் செய்யும் நேர முதலீடு வரும் காலங்களில் நிச்சயம் ஒரு நிரந்திர வருவாய்க்கு வழி வகை செய்து விடும் .
Renting :
உங்களிடம் ஒரு இடமோ அல்லது கூடுதல் அறையோ இருந்தால் அதனை வாடகைக்கு விடுவது மூலம் ஒரு நிரந்திர கூடுதல் வருவாய் நீங்கள் பெற முடியும். மேலும் அதுபோன்று வாடகைக்கு விடுவதன் மூலம் அந்த இடத்தின் maintainence செலவு உங்களுக்கு பெரும் அளவு குறைய தொடங்கி விடுகிறது.
Investing :
உங்களிடம் அதிகளவு வருவாய் இருந்தால் அதனை ஸ்டாக் மார்கெட் அல்லது வேறு ஏதேனும் பினான்சியல் முறையில் சில நாட்கள் கழித்து உங்களுக்கு அதிகளவு கிடைக்கும் வகையில் முதலீடு செய்தால் அதன் மூலம் இருந்து உங்களுக்கு நிச்சயம் ஒரு வருவாய் கிடைத்து கொண்டே இருக்கும்.
இதுபோன்று பல வழிகள் உள்ளன ஒரு நிரந்திர passive income பெற குறிப்பாக அதற்கான செலவு இல்லாத வழியை தேர்ந்தெடுக்க வேண்டும் . கூடுதல் வருவாய் அதிகளவு அளவில் செலவு இல்லாமல் வருவதே சிறப்பாகும் .