orange peel uses for skin:சரும பிரச்சனைகளின் நிவாரணி ஆரஞ்ச் தோல் …! என்ன பயன்கள்?

1 min read
orange peel uses for skin-vidiyarseithigal.com

orange peel uses for skin

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது என்பது நமக்குத் தெரியும். ஆரஞ்சு பழத்தை சருமத்தில் நேரடியாகப் பயன்படுத்துவதை விட ஆரஞ்சு தோல் பயன்படுத்துவது இன்னும் கூடுதலான பலன்களைக் கொடுக்கும். பொலிவிழந்த டல்லான சருமத்துக்கு தொடர்ச்சியாக ஆரஞ்சு தோலை பயன்படுத்தி வரும்போது சருமம் பொலிவாகவும் பளபளப்பாகவும் மாறும்.

ஆரஞ்சு தோலின் நன்மைகள்

ஆரஞ்சு தோல் சருமத்துக்கு இயற்கையான ஸ்கிரப்பாக செயல்பட்டு சருமத்தில் உள்ள மாசுக்களையும் இறந்த செல்களையும் நீக்குகிறது.

பருக்கள் மற்றும் பருக்கள் வந்த தழும்புகளை மறையச் செய்வதில் ஆரஞ்சு தோலுக்கு மிக முக்கிய பங்குண்டு.

கண்ணுக்கு கீழே உள்ள கருவளையங்களை போக்குகிறது.

ஆரஞ்சு தோலில் உள்ள வைட்டமின் சி வயதான தோற்றத்தை மறைத்து சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவி செய்கிறது.

சருமச் சுருக்கங்களை போக்க ஆரஞ்சு தோல் பயன்படும்.

ஆயில் ஸ்கின் உள்ளவர்களுக்கு சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சி, முகத்தில் பருக்கள் உண்டாகாமல் தடுக்கும்.

ஆரஞ்சு தோல் – மஞ்சள் பேஸ்பேக்

தேவையான பொருள்கள்

ஆரஞ்சு தோல் பொடி – 1 ஸ்பூன்
மஞ்சள் – அரை ஸ்பூன்
தேன் – 1 ஸ்பூன்

orange peel uses for skin-vidiyarseithigal.com

orange peel uses for skin

பயன்படுத்தும் முறை
ஆரஞ்சு தோல் பொடியுடன் மஞ்சள் மற்றும் தேன் சேர்த்து நன்கு குழைத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் வரை வைத்திருந்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவலாம் அல்லது உங்களுடைய வழக்கமாக பேஸ்வாஷ்க்கு பதிலாகவும் இந்த பேஸ்ட்டை பயன்படுத்தி பேஸ்வாஷ் செய்யலாம்.

பயன்கள்
இந்த பேஸ்ட்டை பயன்படுத்தி தினமும் பேஸ்வாஷ் செய்து வருவதல் சருமத்தில் உள்ள டேன்களை அகற்ற முடியும். அதோடு சருமம் மிகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.

ஆரஞ்சு தோல் பொடி – கற்றாழை பேஸ்பேக்

தேவையான பொருள்கள்

ஆரஞ்சு தோல் பொடி – 2 ஸ்பூன்

கற்றாழை ஜெல் – 2 ஸ்பூன்

எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்

orange peel uses for skin-vidiyarseithigal.com

orange peel uses for skin

செய்முறை
ஒரு பௌலில் ஆரஞ்சு தோல் பொடியைச் சேர்த்து அதில் கற்றாழை ஜெல் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து நன்கு ஸ்மூத்தான பேஸ்ட்டாக ஆக்கிக் கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை சருமத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் வரை அப்படியே விட்டு விடுங்கள். பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுிக் கொள்ளுங்கள்.

பயன்கள்
இந்த பேஸ்பேக்கை பயன்படுத்துவதன் மூலம் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், தழும்புகள் நீங்கி முகம் பளிச்சென்று பொலிவாக மாறும்.

கெட்ட கொழுப்பை கரைக்க உதவும் உணவுகள் என்னென்ன?

ஆரஞ்சு தோல் – ஓட்ஸ் பேஸ்பேக்

தேவையான பொருள்கள்
ஆரஞ்சு தோல் பொடி – 2 ஸ்பூன்
ஓட்ஸ் பொடி – 2 ஸ்பூன்
தேன் – 1 ஸ்பூன்
ரோஸ் வாட்டர் – 2 ஸ்பூன்

செய்முறை
ஓட்ஸை பொடி செய்து ஒரு பௌலில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதோடு எடுத்து வைத்திருக்கும் ஆரஞ்சு தோல் பொடியையும் கலந்து கொள்ள வேண்டும்.

இந்த கலவையில் தேன் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து கொள்ளுங்கள். இதை முகத்தில் அப்ளை செய்து வட்ட வடிவில் 5 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து பின் அப்படியே 10 நிமிடங்கள் உலர விடுங்கள். நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீர் கொண்டு முகத்தைக் கழுவிக் கொள்ளலாம்.

ஆரஞ்சு தோல் பொடி – சர்க்கரை ஸ்கிரப்பாக

தேவையான பொருள்கள்
ஆரஞ்சு தோல் பொடி – 2 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன்
சர்க்கரை – 1 ஸ்பூன்

orange peel uses for skin-vidiyarseithigal.com

orange peel uses for skin

பயன்படுத்தும் முறை
ஒரு பௌலில் ஆரஞ்சு தோல் பொடியுடன் சர்க்கரை மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

இந்த ஸ்கிரப்பை முகம் மற்றும் உடல் முழுக்க அப்ளை செய்யலாம்.

பயன்கள்
இந்த ஸ்கிரப்பை நம்முடைய சருமத்துக்குப் பயன்படுத்வதன் மூலம் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீக்கப்பட்டு சருமத்தை எக்ஸ்ஃபோலியேட் செய்ய முடியும்.

18 வயதில் Lip Lock காட்சி..! காரணத்தை விளக்கும் அனிகா..!

ஆரஞ்சு தோல் – யோகர்ட் பேஸ்மாஸ்க்

தேவையான பொருள்கள்
ஆரஞ்சு தோல் பொடி – 2 ஸ்பூன்
தேன் – 1 ஸ்பூன்
தயிர் – 2 ஸ்பூன்

orange peel uses for skin-vidiyarseithigal.com

orange peel uses for skin

பயன்படுத்தும் முறை
ஒரு பௌலில் ஆரஞ்சு தோல் பொடியுடன் தேன் மற்றும் தயிர் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு ஸ்மூத்தான் பேஸ்ட்டாக செய்து அதை முகத்தில் அப்ளை செய்யுங்கள்.

20 நிமிடங்கள் வைத்திருந்து உலர்ந்ததும் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவிக் கொள்ளலாம்.

வீட்டிலேயே ஆரஞ்சு தோல் பொடி செய்வது எப்படி?

ஆரஞ்சு பழங்களில் இருந்து தோலை தனியே பிரித்தெடுத்துக் கொள்ளுங்கள்.

அதன் உட்புறத்தில் உள்ள வெள்ளை நிற மெல்லிய தோலை நீக்கி விடுங்கள்.

நன்கு சூரிய ஒளியில் 2-3 நாட்கள் உலர விடுங்கள்.

நன்கு காய்ந்தது அதை மிக்ஸியில் சேர்த்து அரைத்து பொடி செய்து சலித்துக் கொள்ளுங்கள்.

ஆரஞ்சு தோல் பொடி தயார். இதை ஒரு காற்று புகாத பாட்டிலில் போட்டு மூடி வைத்துக் கொண்டால் தேவையான நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Spread the love
x