Top most online jobs for students in tamil..!

1 min read

online jobs for students in tamil

இன்றைய மாணவர்கள் வெறும் கற்றலில் மட்டும் முழுவதும் கவனைத்தை செலுத்துவதை விரும்புவதில்லை. படிக்கும் போது தங்களால் முடிந்த அளவு வருமானத்தை ஈட்ட விரும்புகின்றனர். மேலும் அந்த பகுதி நேர வேலைகள் மூலம் பிற்காலத்தில் எளிதாக ஒரு நல்ல நிறுவனத்தில் சேரலாம் என்ற திட்டமிடுதலில் உள்ளனர்.

இதுபோன்று ஆர்வமிக்க மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்காகவே பல வேலைகள் அவர்களின் படிப்பிற்கேற்றார் போல் ஆன்லைனில் உள்ளன. அவற்றில் சில அவர்களுக்கு தெரிந்ததாகவும் இருக்கும், சில கற்றுக் கொள்ள வேண்டியதாகவும் இருக்கும் . அப்படி என்ன வேலைகள் பகுதி நேரத்தில் ஆன்லைனில் செய்ய முடியும் மற்றும் எங்கு அவற்றை செய்யலாம் என காணலாம்.

amazing facts about india…! இந்தியா பற்றி நீங்கள் அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்..!

Online Tutoring jobs :

தற்போது வெளிநாடு மற்றும் சில உள்நாட்டு நிறுவனங்கள் படித்து கொண்டிருக்கும் மாணவர்களை கொண்டு அவர்களின் கல்வித்தகுதி மற்றும் திறமைகேற்ப டியுடரிங்க் வேலை வழங்கி வருகின்றனர். பெரும்பாலான மாணவர்கள் பகுதி நேரத்தில் இது போன்ற வேலைகளை செய்து கொண்டு தங்களின் படிப்பினை படித்து வருகின்றனர்.

இதுபோன்ற வேலைகள் செய்வது மூலம் நம்முடைய கற்றல் ஆற்றலும் அதிகரித்து கொண்டு வருகிறது. குறிப்பாக மாணவர்களுக்கு அவர்கள் கூடுதலாக கற்றுக் கொள்ளவும் உதவுகிறது. இது போன்ற வேலைகளை வழங்கும் தளங்கள் Chegg, Student-tutor, study pool ஆகியவை ஆகும் .

Article Writing jobs :

எனக்கு எழுதுவது மிகவும் பிடிக்கும் அதிலும் குறிப்பாக சில தலைப்புகளில் எழுதுவது ரொம்ப பிடிக்கும் என்பவர்களுகாகவே சிறந்த வேலையாக உள்ளது. எளிதில் உங்களில் எழுது முடித்து விட்டு அதற்கேற்ப ஊதியத்தை பெற முடியும் . இதற்காக பெரிதாக நீங்கள் கஷ்டபட வேண்டிய அவசியமும் இல்லை. உங்களிடம் உள்ள செல்போன் அல்லது மடிக்கணினி மூலம் எளிதாக இந்த வேலைகளை செய்து முடித்து விடலாம் . இதுபோன்ற வேலைகளை வழங்கும் தளங்கள் Fiverr, Upwork ஆகியவை ஆகும் .

Voice over jobs :

வாய்ஸ் ஓவர் என்றால் என்ன? பின்னனி குரல் கொடுப்பது வாய்ஸ் ஓவர் ஆகும் . உதாரணமாக பல யூடியுப் வீடியோக்களில் வெறும் படங்கள் மட்டும் ஒடிக்கொண்டிருக்கும் அதற்கேற்ப பின்னனி குரல் ஒலித்து கொண்டிருக்கும் . இது போன்ற வீடியோக்களில் பேசுவதற்கென தனி ஆட்கள் உள்ளனர். அவர்களுகென்று தனி ஊதியம் வழங்கப்படுகிறது.

உங்களின் குரல்வளம் நன்றாக இருந்தால் போதும் எளிதாக நீங்களும் வாய்ஸ் ஓவர் வேலைகளை செய்து வரலாம் . இதன் மூலம் நீங்கள் வீட்டிலிருந்து பெரிதாக எந்தவொரு மெனகெடாமல் எளிமையாக சம்பாரிக்கலாம். இது போன்ற வேலைகள் Voices.com என்ற இணையதளத்தில் நீங்கள் பெறலாம் .

Sell artworks :

நன்றாக படம் வரைய தெரியுமா. பட வரைதலில் உள்ள நுணுக்கம் எல்லாம் தெரியுமா . எளிதாக நீங்கள் பார்ட் டைமில் நீங்களே முதலாளி போல் சம்பாரிக்கலாம் . பிறரிடம் வேலை செய்ய வேண்டிய எந்த அவசியமும் இல்லாமல் நீங்களே உங்கள் வருமானத்தை பெற்றுக் கொள்ளலாம் . அதற்கான வழிதான் ஆர்ட் செல்லிங்க் உங்கள் ஒவியங்களை விற்பனை செய்வது. அதற்கான பிரத்யேக தளங்கள் உள்ளன. Etsy, cafepress, zazzle இது போன்ற தளங்கள் மூலம் உங்கள் கற்பனை மற்றும் திறமையை வருவாயாக மாற்ற முடியும் .

Taking short surveys:

சர்வே எடுப்பது நம் அனைவருக்குமே தெரிந்த ஒன்று . ஆனால் இதற்கெல்லாம் கூடவா ஊதியம் தருகீறார்கள் என்று கேட்டால் . ஆம் இதற்கும் தருகிறார்கள். ஒரு நிறுவனம் தொடங்கும் முன் அது குறித்து கருத்துக்கள் மக்களிடம் கேட்கபடும் . அதற்காக அந்நிறுவனத்தின் இது போன்ற பகுதி நேர ஆட்களை வைத்து சர்வேக்களை எடுப்பர் . அவர்கள் குறித்த கால அளவுக்குள் நாம் நம் வேலைகளை முடித்து கொடுத்தால் அதற்கேற்ப நமக்கு வருவாய் கிடைக்கும் . இதுபோன்ற வேலைகள் inbox dollars போன்ற தளங்களில் உள்ளன.

மேலே குறிப்பிட்டவை சில online jobs for students in tamil பகுதி நேர வேலைகள் மட்டுமே ஆகும் . இது போன்ற பல வேலைகள் உள்ளன. அவற்றை மாணவர்கள் தேர்ந்தெடுத்து பயன் பெறலாம் .

Spread the love
x