அடேங்கப்பா…!! புதுமாப்பிள்ளைக்கு 125 வகை உணவுகளை சமைத்து அசத்திய மாமியார்…!! வைரல் வீடியோ…!!

1 min read
food-vidiyar

ஆந்திராவில் புதிதாக திருமணமான மருமகனுக்கு விருந்து வைப்பதில் பலர் பிரமாண்டத்தை காட்டி அசர வைப்பது வழக்கம். அவ்வகையில், மேற்கு கோதாவரி மாவட்டம், பீமா வரத்தில் ஒரு மாமியார் தனது மருமகனுக்கு 125 வகை உணவுகளை சமைத்து கொடுத்து அசத்தியுள்ளார்.

இது தொடர்பாக இணைய தளத்தில் வீடியோ ஒன்று வெளியானது. அதில் புதுமாப்பிள்ளை அமர்ந்து இருக்க, டைனிங் டேபிளில் 125 வகையான உணவுகளை சமைத்து மாமியார் அடுக்கி வைத்துள்ளார். இதை பார்த்த புதுமாப்பிள்ளை வியப்புடன் தனது மனைவியுடன் அமர்ந்தபடியே ஒவ்வொரு உணவாக எடுத்து ரசித்து ருசித்து சாப்பிடுகிறார்.

அப்போது புதுமாப்பிள்ளை மனைவிக்கு உணவை ஊட்டிவிட முயற்சிக்கிறார். ஆனால் அந்த புதுப்பெண் வெட்கத்துடன் வேண்டாம் மாமா என்கிறார். இந்த வீடியோ இணைய தளத்தில் வைரல் ஆன நிலையில் பலரும் கிண்டலாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Spread the love
x