money saving tips:பணம் சேமிக்க சிறந்த வழிகள்! Easy tips கண்டிப்பாக உதவும்!

1 min read
money saving tips-vidiyarseithigal.com

money saving tips

அனைவருக்குமே பணத்தினை செலவு செய்யாமல் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்து கொண்டு தான் இருக்கும் . ஆனால் பலரால் அதனை சரியாக செய்ய முடியாமல் போகலாம். ஒரு சிலர் மட்டுமே அவ்வாறு பணத்தினை சேமித்து வருகின்றனர். செலவு செய்யாமல் சேமித்தால் சிறப்பாக இருக்கும் எண்ணுபவர்கள் கட்டாயம் படிக்க வேண்டியது செய்தி தான் இது.

இன்று நம்மால் எவ்வளவு சேமிக்க முடியுமோ அவை தான் நாளை சிறந்த பயன் தரும் என பலர் கருதுகின்றனர். ஆணால் சேமிக்க சிலரால் மட்டுமே முடிகிறது. தங்களையும் மீறி பலர் செலவு செய்து விடுகின்றனர். தெவையான பொருட்களை வாங்குவது செலவு கிடையாது. ஆனால் தேவையின்றி பலர் பொருட்களை வாங்கி குவிகின்றனர்.

இந்த செய்தியில் எளிதாக சேமிக்க சிறந்த வழிகள் என்வென்று காணலாம் .

Avoid Extended waraanties :

இப்பொழுதெல்லாம் எந்த பொருட்கள் வாங்கினாலும் நாம் வாராண்டி இல்லாமல் வாங்குவது இல்லை. குறிப்பாக ஒரு சில பொருட்களுக்கு அதன் நிறுவனமே கூடுதல் வாரண்டி வழங்குகிறது. அது என்ன கூடுதல் வாரண்டி என்று பார்த்தால் . உதாரணமாக ஒரு செல்போன் வாங்கினால் 1 வருடம் வாரண்டி ஆகும் . ஆனால் ஒரு சில நிறுவனமோ அல்லது நாம் செல்போன் வாங்கும் கடையோ பிரத்யேக வாரண்டி அளிக்கின்றனர்.

அதாவது கூடுதலாக ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் வாரண்டி அளிக்கின்றனர். அதற்கென நாம் கூடுதல் சில தொகையை செலுத்த வேண்டி உள்ளது. இது போன்ற செலவுகளை நாம் தவிர்கலாம் . பெரும்பாலனவர்கள் ஒரு செல்போனை அதிகபட்சமாக 2 அல்லது 3 வருடத்திற்கு மேல் உபயோகிப்பது இல்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் இதுபோன்ற கூடுதல் வாரண்டிகளை நாம் தவிப்பது நல்லது. இதன் மூலம் பணத்தினை சேமிக்கலாம்.

Use cash more often :

பொதுவாக இன்றைய காலகட்டத்தில் பலரிடம் பேங்க் அக்கவுண்ட் உள்ளது. அது மட்டுமின்றி எளிதாக பணபரிவர்த்தனை செய்ய நிறைய செயலிகள் வந்துவிட்டன. அதன் மூலம் இணைய பணபரிவர்த்தனை மேற்கொண்டு வருகிறோம் . இதனால் பலர் சிறிய பொருட்கள் வாங்கினால் கூட அவர்களது வங்கி கணக்கில் இருந்து பணத்தை நேரடியாக செலவு செய்கின்றனர்.

money saving tips-vidiyarseithigal.com

money saving tips

அவ்வாறு நாம் செய்வது மூலம் நமது சேமிப்பு என்ன உள்ளது என்பது நமக்கு தெரியாமல் போகலாம். மேலும் நமது சேமிப்புகள் எளிதில் செலவு கூட ஆகலாம். முடிந்த அளவு நேரடியாக பணத்தினை நம் கையில் இருந்து கொடுத்து சிறு சிறு செலவுகள் செய்வது பணத்தினை நாம் எப்படி செலவு செய்கிறொம் என நாம் தெரிந்து கொள்ள உதவும் .

Save salary increases :

எல்லாரும் கண்டிப்பாக ஒரு பணியில் இருந்து கொண்டு தான் இருப்போம் . அவ்வாறு இருப்பவர்கள் வேலைக்கு சேர்ந்த தொடக்கத்தில் ஒரு ஊதியம் பெற்று கொண்டு இருப்பார்கள் . அந்த ஊதியத்திலேயே அவர்களுக்கு தேவையான செலவுகளை செய்து கொண்டு முடிந்த அளவு சேமித்து கொண்டு வருவார்கள்.

ஒரு கட்டத்திற்கு பிறகு வேலையில் கூடுதல் சம்பள உயர்வு பெறுவார்கள் . அந்த நேரத்தில் பலர் சம்பள உயர்வு கிடைத்துவிட்டது இனி நாம் தாராளமாக செலவு செய்யலாம் எண்ணி செலவு செய்ய தொடங்கி விடுவார்கள். ஆனால் அவ்வாறு செய்வது முழுக்க முழுக்க தவறாகும். கூடுதல் சம்பளம் கிடைத்தாலும் வீண் செலவுகளை தவிர்த்து இந்த சம்பளத்தை முன் சேமித்தது போல கூடுதல் சம்பளமாக சேமிப்பது சிறந்தது ஆகும் .

Shop Brands on sale :

இன்றைய நவீன உலகில் அனைவருக்குமே Branded பொருட்களை உபயோகிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டுதான் உள்ளது. ஆனால் நாம் என்ன செய்கிறோம் உடனடியாக அந்த பொருளை எவ்வளவு விலை இருந்தாலும் கொடுத்து வாங்கி விடுகிறோம் . இது பெரும்பாலனவர்கள் செய்கிற மிகப்பெரிய தவறாகும் .இதனை நாம் முதலில் தவிர்க்க வேண்டும் .

இது போன்ற பொருட்களை நாம் எப்போதுமே அதற்கான குறைந்த விலை சேல் வரும்போது வாங்குவது நல்லது ஆகும் . குறைந்த விலையில் டிஸ்கவுண்ட் சேல் எப்பொதுமே இருந்து கொண்டுதான் இருக்கும் . அதுபோன்ற சமயங்களில் இந்த பொருட்களில் வாங்கினால் கூடுதல் பணத்தை நாம் மிச்சம் செய்யலாம்.

இதுபோன்ற பலவழிகளில் நாம் பணத்தை செலவு செய்யாமல் சேமித்து வரலாம் . மேலும் இது போண்று சேமிக்க கூடுதல் டிப்ஸுடன் பாகம் 2 ல் பார்க்கலாம் .

Spread the love
x